இன்று இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்திய அணி டி20 உலக சாம்பியனாக இந்த போட்டிக்கு வந்துது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்த இதோடு ஆட்டநாயகன் விருதும் வென்ற சிக்கந்தர் ராஸா வெற்றிக்கான காரணங்கள் குறித்து கூறியிருக்கிறார்.
ஜிம்பாப்வே அணி இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு மேல் வரிசையில் கேப்டன் சிக்கந்தர் ராசா பேட்டிங்கில் 19 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசி கட்டத்தில் மடண்டா ஆட்டம் இழக்காமல் 25 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. ரவி பிஸ்னாய் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்கள். இந்திய அணி 10 அவர்களை தாண்டாத பொழுது முக்கிய ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டது. அதற்கு அடுத்து வந்து பொறுப்பை உணர்ந்து வேறு யாரும் விளையாடவும் இல்லை.
இந்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 102 ரன் மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே அணி t20 உலக சாம்பியன் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் கேப்டன் சிக்கந்தர் ராஸா மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தப் பெரிய வெற்றிக்குப் பின் பேசிய ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராஸா “வெற்றி பெற்றதை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஒரு நேரத்தில் ஒரு போட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு விளையாட வேண்டும். இன்னும் தொடர் முடியவில்லை போட்டிகள் இருக்கிறது. உலக சாம்பியன் இந்தியா அதற்கு ஏற்றார் போல் திரும்ப வந்து விளையாடும். எனவேஅடுத்த ஆட்டத்திற்கு தயாராக வேண்டும்.இது 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும் ஆடுகளம் கிடையாது. இரண்டு தரப்பிலுமே பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இருந்தார்கள். நாங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெளிவாக தெரிகிறது.
இதையும் படிங்க : அந்த பேட்ஸ்மேன் கிட்ட அதை எதிர்பார்த்ததே தப்பு.. நான் நின்னுருந்தா கதையே வேற – சுப்மன் கில் பேட்டி
நாங்கள் எங்களுடைய கூட்டத்திற்கும் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கும் உண்மையாக இருக்க வேண்டும். நாங்கள் எங்களுடைய திட்டங்களில் மிகச் சரியாக ஒட்டிக்கொண்டோம். எங்கள் அணி வீரர்களுக்கு முடிவை பற்றி எந்த கவலையும் பட வேண்டாம் என்று கூறிக் கூட்டி வந்தேன். நாங்கள் கேட்ச் எடுத்த விதம் மற்றும் கிரவுண்ட் பீல்டிங் அபாரமாக இருந்தது. நாங்கள் சில தவறுகளையும் செய்வோம். ஆனால் முன்னேறுவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. எங்கள் கூட்டம் எங்களை உயர்த்தி செல்லும். ரசிகர்கள் எங்களுக்கு கொடுக்கும் ஆற்றல் பெரிதும் உதவியது” என்று கூறியிருக்கிறார்.