அந்த பேட்ஸ்மேன் கிட்ட அதை எதிர்பார்த்ததே தப்பு.. நான் நின்னுருந்தா கதையே வேற – சுப்மன் கில் பேட்டி

0
861
Gill

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பிறகு, இந்திய அணி முதல் டி20 தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சுப்மன் கில் தலைமையில் இன்று விளையாடியது. இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இன்றைய போட்டிக்கான டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மான்கின் முதலில் ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய வைத்தார். ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்ததை போலவே சரியாக செயல்படவில்லை. மேலும் ஆடுகளத்தில் இருந்து கூடுதல் பவுன்ஸ் அவர்களை மிகவும் தொந்தரவு செய்தது.

- Advertisement -

20 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் மடண்டா இறுதிவரை களத்தில் நின்று ஆட்டம் இழக்காமல் 25 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில் ரவி பிஸ்னாய் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு மேல் வரிசையில் கேப்டன் சுப்மன் கில் 29 பந்தில் 31 ரன்கள், கீழ் வரிசையில் வாஷிங்டன் சுந்தர் 33 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 19.5 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

டி20 உலக சாம்பியனாக இந்திய அணி வந்த முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்தது குறித்து சுப்மன்கில் பேசும்போது “நாங்கள் நன்றாகவே பந்து வீசினோம். ஆனால் அதுக்கடுத்து நாங்கள் பேட்டிங்கில் மிகவும் மோசமாக செயல்பட்டோம். நாங்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கி பேட்டிங்கை ரசித்து விளையாட நினைத்தோம். ஆனால் நாங்கள் அந்த வழியில் செயல்படவில்லை. நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது முதல் பாதியிலேயே 5 விக்கட்டுகளை இழந்து விட்டோம்.

இதையும் படிங்க : 115 ரன்.. சாதனை வெற்றி.. உலக சாம்பியன் இந்தியாவை.. டி20 உலககோப்பைக்கு தகுதி பெறாத ஜிம்பாப்வே வீழ்த்தியது

நான் ஆட்டம் இழந்த நேரம் மற்றும் ஆட்டம் இழந்த விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. நான் கடைசி வரையில் களத்தில் நின்று இருக்க வேண்டும். அதே சமயத்தில் ஒரு பக்கத்தில் வாஷிங்டன் சுந்தர் நம்பிக்கையுடன் இருந்தார். நீங்கள் 115 ரன்கள் துரத்த வேண்டும் என்கின்ற பொழுது, உங்களுடைய பத்தாவது பேட்ஸ்மேனை நீங்கள் வெற்றிக்கான ரண்களை அடிக்க எதிர் பார்க்கும் பொழுதே, நீங்கள் போட்டியில் தவறு செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -