இந்திய கிரிக்கெட்

சூரியவன்சி இல்லாமல் நாம் ரன் அடிக்காமலா இருந்தோம்?.. அடுத்த போட்டியில் இதை செய்யுங்கள் – கைப் ஆலோசனை

​இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் வெளிப்படையாகத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இஷான் கிஷன் மீண்டும் அணிக்குத் திரும்புவாரேயானால், அணியின் சமநிலையைக் காப்பதற்காக வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இருந்து வெளியே உட்கார வேண்டியிருக்கும் என்று கைப் சுட்டிக்காட்டியுள்ளார்.

​நியூசிலாந்து போன்ற கடினமான ஆடுகளங்களில், பெரிய ஸ்கோர்கள் குவிகின்ற சூழலில் கூடுதல் பந்துவீச்சு ஆப்ஷன் மிகவும் அவசியமானதாக மாறுகிறது. இந்தியா ஏற்கனவே பேட்டிங்கில் வலுவாக இருப்பதால், ஐந்தாவது பந்துவீச்சாளரை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்றும், இதனால் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ந்து வாய்ப்பைப் பெறுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

​இதுகுறித்து முகமது கைப் பேசும்போது “நீங்கள் அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்பதற்காக லோயர் ஆர்டரை மாற்ற முடியாது. நமனும் நிதிஷும் கூட பந்துவீசுகிறார்கள். வைபவ்திறமை மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அவர் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் அவர் துரிதமாக அணியில் சேர்க்கப்பட்டார். இஷான் வந்தால் யார் வெளியே போவது? அப்படியானால் அவர்கள் அதே காம்பினேஷனுடன் செல்வார்கள் என்று நான் நினைக்கிறேன். வைபவ் வெளியே செல்ல வேண்டியிருக்கும். அவர் மோசமான ஃபார்ம் காரணமாக வரவில்லை, கிஷனின் காயம் காரணமாகத்தான் உள்ளே வந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

​தொடர்ந்து அவர் பேசுகையில் “ஜப்பானில் அவர்கள் சுழற்பந்து வீச்சு சூழலில் கூடுதல் பேட்டரை விளையாட வைத்தார்கள். ஆனால் இங்கே, பல ரன்கள் குவிக்கப்படும் சூழலில், வெறும் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் ரிஸ்க் எடுக்க முடியாது. எப்படியும் நாம் நன்றாக பேட்டிங் செய்து வருகிறோம். வைபவ் இல்லாமல் நாம் ரன்கள் அடிக்கவில்லை என்பது போலல்ல. எனவே இதுபோன்ற டிராக்குகளில் நமக்கு ஆறாவது பௌலர் தேவைப்படுவார். எனவே வைபவின் நிலைமை இப்படித்தான் இருக்கும். யாருக்காவது காயம் ஏற்பட்டால் அவர் உள்ள வருவார். இப்போதைக்கு அவரால் அபிஷேக், சாம்சன் மற்றும் இஷானை தாண்டி முன்னேற முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts