இந்திய கிரிக்கெட்

115 ரன்.. சாதனை வெற்றி.. உலக சாம்பியன் இந்தியாவை.. டி20 உலககோப்பைக்கு தகுதி பெறாத ஜிம்பாப்வே வீழ்த்தியது

இன்று ஜிம்பாப்வே ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் உலகச் சாம்பியனான இந்திய அணியை, டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியாத ஜிப்பாப்வே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இந்திய அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார். பெரிய பலமற்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கில் வெளிப்படையாகவே தடுமாறியது. இந்திய பந்துவீச்சை சமாளித்து இரண்டு எடுப்பது அவர்களுக்கு மிகவும் தடுமாற்றமாக இருந்தது.

இறுதியாக ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு பேட்டிங்கில் மாதவேரே 22 பந்தில் 21 ரன், பிரையன் பென்னட் 15 பந்தில் 22 ரன்கள், டியான் மையர்ஸ் 22 பந்தில் 23 ரன்கள், விக்கெட் கீப்பர் மடண்டே 25 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணியின் தரப்பில் ரவி பிஸ்னாய் 4 ஓவர்களுக்கு 2 மெய்டன்கள் செய்து 13 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். இவருடன் வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என எல்லோரும் நினைத்திருந்தார்கள். இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் சுக்மன் கில் உடன் வந்த அபிஷேக் ஷர்மா நான்கு பந்துகளை சந்தித்து சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு ரன் ஏதும் எடுக்காமல் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வந்த ருதுராஜ் 9 பந்தில் 7 ரன், அறிமுக வீரர் ரியான் பராக் 3 பந்தில் 2 ரன், ரிங்கு சிம் 3 பந்தில் 0 ரன், மற்றுமொரு அறிமுக வீரர் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் 14 பந்தில் 7 ரன், கேப்டன் சுப்மன் கில் தாக்குப் பிடித்து விளையாடி 29 பந்தில் 31 ரன், ரவி பிஸ்னாய் 8 பந்தில் 9 ரன் எடுத்து வரிசையாக வெளியேறினார்கள்.

இதைத் தொடர்ந்து அதிரடி காட்டிய ஆவேஸ் கான் 12 பந்தில் 16 ரன், முகேஷ் குமார் 3 பந்தில் 0 ரன், கடைசி வரை நின்று போராடிய வாஷிங்டன் சுந்தர் 33 பந்தில் 27 ரன்கள் எடுக்க இந்திய அணி 19. 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : ரோகித் விராட் இடத்துக்கு.. அடுத்த 10 வருஷத்துக்கு இந்த 2 பசங்கதான் விளையாடுவாங்க – பிராட் ஹாக் கணிப்பு

ஜிம்பாப்வே 115 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணிக்கு எதிராக மிகக் குறைந்த ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற அணி என்கின்ற சாதனையை படித்திருக்கிறது. இதற்கு முன்பாக நாக்பூரில் நியூசிலாந்து அணி 2016ஆம் ஆண்டு 127 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றி பெற்றிருந்தது இந்த வகையில் சாதனையாக இருந்தது.

- Advertisement -
Published by

Recent Posts