ரோகித் விராட் இடத்துக்கு.. அடுத்த 10 வருஷத்துக்கு இந்த 2 பசங்கதான் விளையாடுவாங்க – பிராட் ஹாக் கணிப்பு

0
508
Hogg

இந்திய டி20 அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். எனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அடுத்த பத்து வருடம் இந்திய டி20 கிரிக்கெட்டுக்கான துவக்க ஆட்டக்காரர்களை கண்டறிய வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த இருவரின் இடத்தை நிரப்பக் கூடியவர்களாக எந்த இந்திய இளம் வீரர்கள் இருப்பார்கள் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியிருக்கிறார்.இந்திய டி20 அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். எனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அடுத்த பத்து வருடம் இந்திய டி20 கிரிக்கெட்டுக்கான துவக்க ஆட்டக்காரர்களை கண்டறிய வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த இருவரின் இடத்தை நிரப்பக் கூடியவர்களாக எந்த இந்திய இளம் வீரர்கள் இருப்பார்கள் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியிருக்கிறார்.

ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி t20 உலக கோப்பை தொடரை வென்ற நிலையில், இதற்கு அடுத்து முதல் டி20 தொடராக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இளம் வீரர் சுப்மன் கில் தலைமையில் இளம் இந்திய அணி இன்று முதல் போட்டியில் விளையாடிக் கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சுப்மன் கில் ஜெய்ஸ்வால், ருதுராஜ் மற்றும் அபிஷேக் சர்மா என இந்திய டி20 கிரிக்கெட்டுக்கான எதிர்கால நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களிலிருந்து எந்த இரண்டு வீரர்கள் சரியாக இருப்பார்கள் என பிராட் ஹாக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “இந்தியா ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு புதிய அணியை கொண்டு விளையாடுகிறது. இந்தத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடத்திற்கு யாரை முன் வைத்து விளையாட போகிறார்கள்? என்று பார்க்க வேண்டும். எந்த இரண்டு வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கிறார்களோ அவர்களை எதிர்காலத்திற்காக பார்க்கிறார்கள் என்று அர்த்தம்.

- Advertisement -

அபிஷேக் ஷர்மாவை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் அவர் மிகவும் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன். அவர் அதிகபட்சமாகவே ஐபிஎல் தொடரில் 38 பந்துகள் மட்டுமே விளையாடி இருக்கிறார். அவர் அதிக பந்துகளை எடுத்து களத்தில் இருக்கக்கூடியவர் கிடையாது. மாறிவரும் கிரிக்கெட்டில் அவரைப் போன்ற ஒருவர் தேவை. அதே சமயத்தில் அவருடன் நிலைத்து நின்று விளையாடக்கூடிய ஒருவரும் தேவை.

இதையும் படிங்க : கோலி ரோகித் ரெண்டு பேரும் இப்படிதான்.. எல்லாத்துக்கும் சந்தோசம் நான் போயிட்டு வரேன் – ராகுல் டிராவிட் உருக்கமான பேச்சு

இப்படி நிலைத்து நின்று விளையாடக்கூடிய வீரர்களாக ருதுராஜ் மற்றும் கில் இருவரும் இருக்கிறார்கள். இதில் கில் ருதுராஜை விட அதிக திறன்கள் கொண்டவர். அவர் நீண்ட காலத்திற்கு இந்திய அணிக்கு விளையாட கூடியவர். எனவே அடுத்த 10 வருடத்திற்கு அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை நிரப்பி விளையாடுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -