இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக டெஸ்ட் கிரிக்கெட்டையும் விமர்சனங்களையும் எப்படி அணுக வேண்டும் என கம்பீருக்கு ஜாகிர் கான் அறிவுரை கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய டெஸ்ட் அணி சொந்த மண்ணில் வெளிநாட்டு அணிகளுக்கு எதிராக படுதோல்வியை அடைந்து வருகிறது. இதன் காரணமாக அணி நிர்வாகத்தின் மீதும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீதும் நிறைய விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
கம்பீரின் அணுகுமுறை
கம்பீர் வெள்ளை பந்து கிரிக்கெட் வடிவத்தில் டி20 கிரிக்கெட்டுக்கு மிகச் சிறப்பான அணுகுமுறையை வைத்திருக்கிறார். அணியின் ப்ளேயிங் லெவனில் அதிக ஆல்ரவுண்டர்களை நிரப்பி, பந்துவீச்சுக்கும் பேட்டிங்க்கும் நிறைய ஆப்ஷன்களை கொண்டு வந்து எதிரணியை அதிரடியான முறையில் வெல்கிறார்.
அதே சமயத்தில் இதையே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் அவர் கொண்டு வரும் பொழுது அது பெரிய பிரச்சனைகளை உருவாக்கி விடுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு குறைந்தது நான்கு சிறப்பு பவுலர்கள் இருக்க வேண்டும். மேலும் பேட்டிங் வரிசை ஏழு வரையில் இருந்தாலும், ஒவ்வொரு இடத்திற்கும் நிரந்தரமாக விளையாட கூடிய வீரர்கள் இருக்க வேண்டும். ஆனால் கம்பீர் இந்த முறையில் செல்லாததால் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறது.
ஜாகீர் கான் அறிவுரை
இதுகுறித்து ஜாகீர் கான் கூறும் பொழுது “இந்திய கிரிக்கெட் பொருத்தவரையில் பயிற்சியாளராக பொறுப்பு எடுத்துக் கொள்வதும், மதிப்பீடும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். மேலும் விளையாட்டு மீது உங்கள் ஆய்வு இருந்து கொண்டே இருக்க வேண்டும். இத்துடன் உங்கள் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் நீங்கள் ஒவ்வொரு முறையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். இந்த விமர்சனங்களை எதிர்கொள்ள உங்களுக்கு தடித்த தோல் இருக்க வேண்டும்”
இதையும் படிங்க : ரசலை கொல்கத்தா வெளியே விட.. சிஎஸ்கேதான் முக்கிய காரணம்.. பின்னணியில் நடந்த அதிரடி விஷயங்கள்
“நீங்கள் இந்தியாவில் டெஸ்ட் விளையாடும் பொழுது ஐந்து நாட்களுக்கும் போட்டி செல்கின்ற வகையில் ஆடுகளத்தை அமைக்க வேண்டும். இதில் சில தோல்விகள் வந்தால் கூட அதை நீங்கள் பொருட்படுத்தக் கூடாது. உங்களுடைய பேட்ஸ்மேன்களை விளையாட விட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எளிமையான அதே சமயத்தில் தெளிவான ஒரு சிந்தனை வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






