ஐபிஎல் தொடரில் தற்போது கொல்கத்தா அணி நிர்வாகம் ஆண்ட்ரூ ரசலை தக்க வைக்காததற்கு சிஎஸ்கே நிர்வாகம் எடுத்த ஒரு முடிவுதான் காரணம் என செய்திகள் தெரிவிக்கிறது.
ஐபிஎல் தொடரில் 2012ஆம் ஆண்டு முதல் ஆண்ட்ரூ ரசல் கொல்கத்தா அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். அவர் இதுவரையில் வேற எந்த அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் விளையாடியது இல்லை. எனவே கொல்கத்தா அணியின் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
கொல்கத்தா சிஎஸ்கே ஆச்சரியம் முடிவு
கொல்கத்தா அணி நிர்வாகம் ஆண்ட்ரூ ரசலை கழட்டிவிட்டது போலவே, சிஎஸ்கே அணி நிர்வாகம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பதிரணாவை கழட்டி விட்டது. சிஎஸ்கே அணியின் இந்த முடிவும் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. காரணம் மகேந்திர சிங் தோனியின் விருப்ப வீரராக பதிரணா இருந்தார்.
இந்த நிலையில் ஆண்ட்ரூ ரசல் வெளியேற்றப்பட்டதற்கு சி எஸ் கே அணி நிர்வாகம் பதிரணாவை வெளியேற்றியது தான் காரணம் என தற்போது செய்திகள் கூறுகிறது. தற்போது ரசல் ஏலத்திற்கும் வராமல் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றது சிஎஸ்கே அணிக்கு வைக்கப்பட்ட செக்காக பார்க்கப்படுகிறது.
பின்னணி காரணம் என்ன?
சிஎஸ்கே அணி நிர்வாகம் பதிரணாவை வெளியேற்றாமல் இருந்தால் கொல்கத்தா அணி ரசலை வெளியேற்றாமல் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. காரணம் சிஎஸ்கே அணியை விட கொல்கத்தா அணியின் கையில் தற்போது போல் பணம் அதிகமாக இருந்திருக்கும்.
இதையும் படிங்க : கம்பீரை காப்பாற்ற மாட்டேன்.. நான் கோச்சா இருந்திருந்தா இதத்தான் பண்ணி இருப்பேன் – ரவி சாஸ்திரி விமர்சனம்
இந்த நிலையில் சிஎஸ்கே அணி பதிரணாவை வெளியேற்றும் என கொல்கத்தா அணி ஏதோ ஒரு வகையில் தெரிந்து வைத்திருந்திருக்கிறது. அப்போது ரசலை தாங்கள் வைத்திருந்தால், சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளின் கையில் ஒரே மாதிரி பணம் இருந்திருக்கும். அப்போது ஏலத்தில் கேமரூன் கிரீன் போன்ற முக்கிய வீரரை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டிருக்கும். எனவே இந்த காரணத்திற்காகவே ரசலை வெளியிட்டு பிறகு அவரை ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறவும் வைத்திருக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகிறது.






