17 வருட ஐபிஎல் வரலாற்றில்.. அந்த வேலைக்கு இந்த சிஎஸ்கே வீரரை விட மும்பை பிளேயர்தான் பெஸ்ட் – ஜாகிர் கான் தேர்வு

0
95
Zaheer

இதுவரையில் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் யார் என்று பலதரப்பட்ட பந்துவீச்சாளர்களை வைத்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர் ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் ஜாகிர் கான் பயிற்சியாளர் குழுவில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். தற்போது அவர் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் மெண்டர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். கம்பீர் அந்த பொறுப்பில் இருந்து விலகியதால் லக்னோ அணி நிர்வாகம் இவரை கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

டிவைன் பிராவோ – லசித் மலிங்கா

ஐபிஎல் தொடர் வரலாற்றில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் யார் என்கின்ற கேள்வி ஜாகிர் கானிடம் முன் வைக்கப்பட்டது. முதலில் சிஎஸ்கே அணியின் டிவைன் பிராவோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கா இருவரது பெயரையும் கூறிய பொழுது ஜாகிர் கான் லசித் மலிங்காவை தேர்ந்தெடுத்தார். சிஎஸ்கே அணியின் டிவைன் பிராவோவை நிராகரித்தார்.

இந்த நிலையில் அடுத்து புவனேஸ்வர் குமார் மற்றும் டிரெண்ட் போல்டை வைத்து மீண்டும் கேட்கப்பட்டது. அப்பொழுதும் ஜாகிர் கான் மிக உறுதியாக லசித் மலிங்காவையே தேர்ந்தெடுத்தார். இதற்கு அவர் ” லசித் மலிங்கா ஐபிஎல் தொடரில் நிறைய செய்திருப்பதாக நான் நினைக்கிறேன். எனவே நான் அவரையே தேர்ந்தெடுக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

முடிவை மாற்றிக்கொண்ட ஜாகிர் கான்

இதைத்தொடர்ந்து பும்ரா பெயர் முன் வைக்கப்பட்டது. உடனே ஜாகிர் கான் லசித் மலிங்காவை விட்டு பும்ராவை தேர்ந்தெடுத்தார். இதைத்தொடர்ந்து சந்தீப் சர்மா, மோஹித் சர்மா மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோரது பெயர்கள் முன்வைக்கப்பட்டது. இருந்தபோதிலும் தற்போது உம்ராவையே தான் தேர்ந்தெடுப்பதாக உறுதியாக ஜாகிர் கான் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நான் கிடையாது.. இப்ப இவர்தான் உலகின் நம்பர் 1 ரிஸ்ட் ஸ்பின்னர் இவர்தான்.. இதுதான் உண்மை – சாகல் கருத்து

இறுதியாக இது குறித்து பேசிய ஜாகிர் கான் கூறும் பொழுது “எதிர்காலத்தில் நாம் இந்த கேள்விக்கு அர்ஸதீப் சிங்கை தேர்ந்தெடுக்கும் இடத்திற்கு வரலாம். ஆனால் தற்போது பும்ராவை நான் தேர்ந்தெடுக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் மூன்று போட்டிகளில் காயத்தில் இருக்கும் பும்ரா விளையாட மாட்டார் என்கின்ற செய்திகள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -