இந்திய அணி வீரர் யுஸ்வேந்திர சஹல் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடும் முதல் போட்டிக்கான தன்னுடைய பிளேயிங் லெவனை கூறியிருக்கிறார். இதில் அதிரடியான விஷயமாக அவர் இஷான் கிஷானை சேர்க்கவில்லை. தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானவர்கள் சஞ்சு சம்சனை நீக்கிவிட்டு இஷான் கிஷானை விளையாட வைக்க வேண்டும் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் தன்னுடைய பிளேயிங் லெவனில் இன்னொரு அதிரடியாக தன்னுடைய சக ஸ்பின் பார்ட்னர் குல்தீப் யாதவையும் சேர்க்கவில்லை. அவர் எப்பொழுதும் குல்தீப் யாதவுக்கு ஆதரவாக பேசக் கூடியவர். தனக்கு இடமில்லை என்றால் கூட குல்தீப் யாதவுக்கு இந்திய அணியில் இடம் இருக்க வேண்டும் என தொடர்ந்து பேசி வந்தவர். அவரே தற்போது குல்தீப் யாதவை இந்திய பிளேயிங் லெவனில் தவிர்த்து இருப்பதும் பெரிய ஆச்சரியத்தை உருவாக்கியிருக்கிறது.
யுஸ்வேந்திர சஹல் இந்திய ப்ளேயிங் லெவன்: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா.






