தோனி விஷயத்தில் திடீர் பல்டி அடித்த யுவராஜ் சிங் தந்தை.. கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியம்

0
33
Dhoni

இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டனான மகேந்திர சிங் தோனி குறித்து யுவராஜ் சிங் தந்தை கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியப்படும் முறையில் நல்ல விதத்தில் பேசியிருக்கிறார்.

பொதுவாக யுவராஜ் சிங் தந்தை மகேந்திர சிங் தோனி பற்றி பேசும்பொழுது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவதை வாடிக்கையாக வைத்திருப்பார். தன் மகன் இந்திய அணியின் கேப்டனாக முடியாததற்கும் புகழ் பெற முடியாததற்கும் காரணம் தோனிதான் என குற்றம் சாட்டுவார். தற்போது இதில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

திடீரென தேடி வந்த கேப்டன் பதவி

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கங்குலி விலகிய பிறகு வெற்றிடம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சேவாக் மற்றும் யுவராஜ் சிங் போட்டியில் இருந்தார்கள். இப்படியான நிலையில் மகேந்திர சிங் தோனியை முதல் டி20 உலகக் கோப்பை தொடருக்கு கேப்டனாக அனுப்பும்படி சச்சின் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் வேண்டுகோள் வைத்தார்.

சச்சின் மேல் இருந்த நம்பிக்கை மற்றும் மரியாதையின் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் தோனியை திடீரென கேப்டன் ஆக்கியது. சேவாக் மற்றும் யுவராஜ் சிங் என இரண்டு மூத்த வீரர்கள் இடையே பிரிவினை ஏற்படக் கூடாது என, இருவரையும் தாண்டி சச்சின் தோனியை கேப்டனாக கொண்டு வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் யுவராஜ் சிங் கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய அளவிற்கு புகழ் பெற முடியாததற்கு தோனி காரணம் என அவரது தந்தை தொடர்பு குற்றம் சாட்டி வந்தார்.

- Advertisement -

தோனி அச்சமற்ற வீரர்

தற்போது தோனி பற்றி பேசி இருக்கும் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் கூறும் பொழுது ” கேப்டனாக தோனியின் சிறந்த விஷயம் என்னவென்றால் அவர் விக்கெட்டை நன்றாக ரீட் செய்து எந்தப் பகுதியில் எப்படி பந்து வீச வேண்டும் என பந்துவீச்சாளர்களுக்கு சிறப்பான முறையில் ஆலோசனை தர முடியும் என்பதுதான். தோனி மிகவும் ஊக்கம் அளிக்கும் கேப்டனாக இருந்திருக்கிறார். களத்தில் வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என சிறப்பாக அவர்களுக்கு அவரால் வழி காட்ட முடியும்”

இதையும் படிங்க : யுவராஜ் செஞ்ச அந்த வேலையை செய்ய.. இப்ப இருக்க ஒரே ஆள் சஞ்சு சாம்சன் மட்டும்தான் – சஞ்சய் பாங்கர் கருத்து

“ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மிட்சல் ஜான்சன் தோனியின் ஹெல்மெட் கம்பிகளில் பந்தை அடித்தார். ஆனால் தோனி அங்கிருந்து கொஞ்சம் கூட நகராமல் நின்றார். மேலும் அடுத்த பந்தை அவர் சிக்ஸர் அடித்தார். இந்த வகையில் தோனி கிரிக்கெட்டில் மிகவும் அச்சமற்ற ஒரு வீரராக இருந்தார். அவருடைய அச்சமற்ற தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று முதல் முறையாக பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -