இந்திய கிரிக்கெட்டில் யுவராஜ் சிங்குக்கு அடுத்து ஒரு குறிப்பிட்ட விஷயத்தை செய்யக்கூடிய திறமை சஞ்சு சாம்சனுக்கு மட்டுமே இருக்கிறது என இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்திருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் மற்றும் துவக்க வீரருக்கான இடத்தில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த ஐந்து போட்டிகளையும் அவர் விளையாடினால் மொத்தம் தொடர்ந்து 12 டி20 போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்பு பெற்றவராக இருப்பார்.
சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறை
இந்திய அணிக்குள் நீண்ட காலத்திற்கு முன்பே வந்துவிட்டாலும் சஞ்சு சாம்சனுக்கு தொடர் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர் களம் இறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் பெரிதாக ரன்கள் எடுக்க வேண்டிய அழுத்தம் இருந்து கொண்டே இருந்தது. அப்படி அவர் ரன் எடுக்காமல் போகும் பட்சத்தில் உடனடியாக அவர் அணியில் நீக்கவும் செய்யப்பட்டார். இதனால் அவர் செயல் திறன் கடுமையாக பாதித்தது.
இந்த நிலையில் இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீர் இருவரும் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஏழு டி20 போட்டிகளுக்கு சஞ்சு சாம்சனுக்கு தொடர் வாய்ப்புகள் கொடுக்கப்படும் என அவருக்கு தெரிவித்தார்கள். இது சஞ்சு சாம்சனுக்கு நல்ல ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது. இந்த ஏழு டி20 போட்டிகளில் மட்டும் அவர் மொத்தம் மூன்று சதங்கள் அடித்து புதிய உலகச் சாதனையை படைத்தார். தற்போது மீண்டும் ஐந்து போட்டிகளுக்கு அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
யுவராஜுக்கு அடுத்து சஞ்சு சாம்சன்தான்
இதுகுறித்து சஞ்சய் பாங்கர் கூறும் பொழுது “தற்போது சாம்சன் பெற்றிருக்கும் வெற்றியை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நீண்ட காலமாக இந்திய அணியில் இருந்தார் ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கப்படவில்லை. தற்போது அவருக்கு நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கின்றன. இது அவருக்கு முக்கியமானதாக அமைகிறது. ஏனென்றால் எந்த ஒரு பேட்டருக்கும் மூன்று நான்கு போட்டிகள் தொடர்ச்சியாக அமையும் பொழுதுதான், அவர்களால் அழுத்தத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியும்”
இதையும் படிங்க : WTC பைனல்.. ஆஸியை விட எங்களுக்கு அட்வான்டேஜ் இல்ல.. இதுதான் காரணம் – ஜான்டி ரோட்ஸ் பேச்சு
“அவர் மேல் வரிசையில் தற்போது பேட்டிங் செய்கின்ற காரணத்தினால், சூழ்நிலையைப் பற்றி எந்த ஒரு கவலையையும் கொள்ளத் தேவையில்லை. பீல்டிங் வெளியே சென்ற பிறகும் கூட அவரால் எளிதாக சிக்ஸர்கள் அடிக்க முடியும். யுவராஜ் சிங்குக்கு அடுத்து இந்திய கிரிக்கெட்டில் எளிதாக சித்தர்கள் அடிக்க முடிந்த ஒரு பேட்ஸ்மேன் என்றால் அது சஞ்சு சாம்சன் மட்டும்தான். தற்போது அவர் எல்லா வழிகளிலும் சிறப்பாக விளையாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.