இந்திய கிரிக்கெட்

SRH கேப்டனா அபிஷேக்தான் வரணும்.. தோனியால எனக்கு நடந்தது இப்ப அவனுக்கும் நடக்குது – யுவராஜ் வருத்தம்

தற்போது சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு இஷான் இஷான் கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார். ஆனால் அபிஷேக் ஷர்மாவை கேப்டனாக கொண்டு வந்திருக்க வேண்டும் என யுவராஜ் சிங் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த முறை பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விளையாடாததால் இஷான் கிஷான் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். ஆனால் அபிஷேக் ஷர்மா அந்த அணிக்காக 7 வருடங்களாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் பதவி தந்திருக்க வேண்டும்

இது குறித்து யுவராஜ் சிங் பேசும்பொழுது ” அபிஷேக் ஷர்மாவுக்கு ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவி கொடுக்கப்படாததால் நான் சற்று ஏமாற்றம் அடைந்தேன். எனக்கு இஷான் கிஷானை மிகவும் பிடிக்கும். இந்திய கிரிக்கெட்டில் அவரது வளர்ச்சியை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் ஒரு வீரரின் கண்ணோட்டத்தில் இருந்து நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா வந்தார்”

“இப்போது அபிஷேக் சர்மா இடத்தில் இஷான் இருந்திருந்தால், ஏழு வருடங்களாக ஒரே அணிக்காக விளையாடி உலகக் கோப்பையையும் வென்ற பிறகு, அவருக்கு அந்த அணியின் கேப்டன் பதவி கிடைக்காமல் போனால் எப்படி இருந்திருக்கும்? அவரால் ஏமாற்றம் இல்லாமல் விளையாடியிருக்க முடியுமா?”

- Advertisement -

தோனிக்கு செய்தார்கள்

“நான் இந்திய அணியில் விளையாடிய பொழுது அப்போது துணை கேப்டனாக இருந்தேன். ஆனால் அடுத்த கேப்டனாக நான் கொண்டு வரப்பட வேண்டும். மூத்த வீரராக ஷேவாக் பாய் இருந்தார். ஆனால் திடீரென தோனியை கேப்டனாக கொண்டு வந்தார்கள்”

இதையும் படிங்க : சிஎஸ்கே ஒரு மாற்றத்தை செஞ்சா போதும்.. மாஸ் பிளேயிங் XI இதுதான்.. இந்த முறை தப்பு செய்யாதீங்க

“அவரும் பெரிய சாதனைகள் செய்யவே பிறந்தவர் என்பது போல செய்தார். அந்த விஷயங்கள் நடக்கவே செய்தன. ஆனால் ஒரு வீரனின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் பொழுது அது பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts