இன்று சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே ஒரு முக்கிய மாற்றத்தை செய்ய வேண்டியதாக உள்ளது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் மகேந்திர சிங் தோனி மற்றும் டிவால்ட் பிரிவியஸ் இருவரும் காயம் காரணமாக விளையாட மாட்டார்கள். எனவே மிடில் ஆர்டரை வலிமைப்படுத்த வேண்டியது உள்ளது.
இந்த வீரர் தேவையில்லை
கடந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஆப் ஸ்பின் ஆல்ரவுண்டர் மேத்யூ ஷார்ட் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே ஆப் ஸ்பின் நல்ல முறையில் வீசக்கூடிய ஆயுஸ் மாத்ரே அணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் ஐபிஎல் தொடரில் பெரிய அளவுக்கு மேத்யூ ஷார்ட் சிறந்த முறையில் விளையாடியது இல்லை. எனவே இவரை இன்று விளையாட வைக்க கூடாது என பல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த வீரரை கொண்டு வர வேண்டும்
இந்த நிலையில் மினி ஏலத்தில் 14 .20 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட உள்நாட்டு வீரர் பிரசாத் வீர் விளையாட வைக்கப்பட வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். அவர் இடது கை சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிலேயே அவருக்கு வாய்ப்பு தருவது அவரை பரிசோதித்துப் பார்க்க உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க : அவமானப்படுத்த சொல்லலை எங்களுக்கு நல்ல டீம் அமையல.. சிறந்த வீரர்களை ஏலத்தில் தவற விட்டோம் – ருதுராஜ் ஒப்புதல்
சிஎஸ்கே பிளேயிங் XI: ருதுராஜ், சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, சர்பராஸ் கான், சிவம் துபே, கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, காம்போஜ், மேட் ஹென்றி மற்றும் இம்பேக்ட் பிளேயர் கலீல் அகமத்.






