இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தான் அணி தயாரா இருங்க.. எங்க ஆளு 60 பந்து சம்பவம் ஒன்னு செய்யப் போறாரு – யுவராஜ் சிங் கணிப்பு

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் நாளைய போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் முக்கியமான கணிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

- Advertisement -

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள இருக்கும் போட்டி மிக முக்கியமான போட்டியாக வணிக ரீதியாகவும் விளம்பர ரீதியாகவும் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்க்கும் போட்டியாக இது அமைந்திருக்கிறது.

பாகிஸ்தான் அணிக்கு சோதனை

தற்போது உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் சுமாரானதாக மாறி வந்திருக்கிறது. அந்த அணியின் சீனியர் பேட்ஸ்மேன்கள் தற்போதைய மாறி இருக்கும் கிரிக்கெட்டுக்கு தகுந்த முறையில் விளையாடுவதில்லை. அவர்களின் மந்தமான பேட்டிங் அந்த அணிக்கு பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இந்திய அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது மாறி வரும் கிரிக்கெட்டுக்கு ஏற்றபடி அதிரடியாக விளையாடவும் அதே சமயத்தில் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடவும் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான நிலையில் இருக்கிறார்கள். மேலும் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என எல்லாவற்றிலும் உயர் தரத்தில் இருக்கிறார்கள். எனவே இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பல முன்னாள் வீரர்கள் கணித்திருக்கிறார்கள்.

- Advertisement -

60 பந்துகளில் சதம்

இந்த போட்டி குறித்து பேசி இருக்கும் யுவராஜ் சிங் கூறும் பொழுது “ரோகித் சர்மா பார்மில் இருந்தால் 60 பந்துகளில் சதம் அடிப்பார். அவர் உள்ளே சென்றவுடன் பௌண்டரி அடிப்பது மட்டும் இல்லாமல் உடனுக்குடனே அவர் சிக்ஸர் அடிக்க கூடியவர். மேலும் ஒரு பந்துவீச்சாளர் மணிக்கு 140, 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினாலும், ரோகித் சர்மா மிக எளிதாக அதை விளையாடுவார். மேலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 120 முதல் 140 வரையில் அதிகமாக இருக்கும். அவர் தனி ஒரு வீரராக போட்டியை வெல்லக்கூடியவர்”

இதையும் படியுங்க : இந்திய அணியில் 5 சுப்மன் கில் இருக்காங்க.. பாகிஸ்தான நினைச்சா பாவமா இருக்கு – சவுரவ் கங்குலி பேச்சு

“ரோகித் சர்மா பார்மில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அது எனக்கு ஒரு பிரச்சனை கிடையாது. எனது மேட்ச் வின்னர் களை நான் எப்போதும் ஆதரிக்க செய்வேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பொதுவாக விராட் கோலியுடன் இணைந்து ரோகித் சர்மா மிகப்பெரிய மேட்ச் வின்னராக இருந்து வந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts