நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தொடரிலும் இந்திய அணி ஃபேவரைட் அணியாக இருப்பதாக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை பாகிஸ்தான் அணி தோற்கும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறிவிடும். பாகிஸ்தான் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துகின்ற காரணத்தினால் அரைஇறுதியை எட்ட முடியாவிட்டால் பெரிய ஏமாற்றமாக அமையும்.
ஐந்து சுப்மன் கில்
தற்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை 8 வரையில் நீளமாக இருக்கிறது. எட்டாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்கிறார் என்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மாறியிருக்கிறது. இதன் காரணமாக மேல் வரிசையில் வரும் வீரர்கள் அச்சமின்றி தாக்குதல் பாணியில் பேட்டிங் செய்ய முடிகிறது. இது இந்திய அணிக்கு வெற்றியை கொடுக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது.
இது குறித்து சவுரவ் கங்குலி கூறும் பொழுது ” இந்திய அணியை பொறுத்தவரையில் ஒன்று இரண்டு மூன்று என ஐந்து வரியில் இந்திய அணியிடம் சுப்மன் கில் இருக்கிறார்கள். இவர்கள் யார் வந்தும் சதம் அடித்து இந்திய அணியை போட்டியில் வெல்ல வைக்க முடியும். அக்சர் படேல் உங்களுக்காக பேட்டிங் வரிசையில் ஐந்தாம் இடத்தில் பேட்டிங் செய்யும்பொழுது உங்களுடைய பேட்டிங் ஆழத்தை கற்பனை செய்து பாருங்கள்”
இந்தியா திறமைகளின் வீடு
“பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட்டை இழந்த பொழுது இந்திய அணி கொஞ்சம் தொந்தரவில் இருந்தது. ஆனால் கே.எல்.ராகுல் உள்ளே வந்து சிறப்பாக விளையாடி சரி செய்தார். அதே சமயத்தில் பேட்டிங் வரிசையில் ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா பின்னால் இருந்தார்கள். இந்தியாவிடம் இருக்கும் திறமைகளை எடுத்துக் கொண்டால் இந்தியா திறமைகளின் தாய் வீடாக இருக்கிறது”
இதையும் படிங்க : பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஆடறது இந்த கிரிக்கெட்டே இல்ல.. நாங்க திறமையில வேற மாதிரி – இர்பான் பதான் விமர்சனம்
“பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமில்லாமல் இந்த தொடரில் இந்திய அணிதான் ஃபேவரைட். பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டி சாதாரணமாக இருக்காது. சுழல் பந்துவீச்சு மிக முக்கியமானதாக இருக்கும். இந்தியா பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடிய அதே பிளேயிங் லெவன் உடன் களம் இறங்கும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.






