இந்திய அணியின் இளம் வீரரான வைபவ் சூரியவன்ஷி, நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக விராட் கோலியைத் தன்னுடைய முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று இந்திய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். இளம் வயதிலேயே இந்திய டி20 அணியில் வாய்ப்பு பெற்றுள்ள சூரியவன்ஷியின் திறமைக்கு இந்தத் தொடர் ஒரு மிகச்சிறந்த பரீட்சையாக இருக்கும்.
நியூசிலாந்து நாட்டின் சவாலான ஆடுகளச் சூழலில் இளம் பேட்டர்கள் தங்களது ஃபோகஸ் மற்றும் அப்ரோச் ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். விராட் கோலி இளம் வயதில் தன் ஆட்டத்தை எப்படிக் கட்டமைத்தார் என்பதைக் கற்றுக்கொண்டால், சூரியவன்ஷி நீண்ட காலம் சர்வதேச அளவில் ஜொலிக்க முடியும்.
சூரியவன்ஷி அதிரடி பேட்டிங் செய்யும் ஷாட் செலக்ஷன் மற்றும் ஃப்ரண்ட் புட் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். பவர்ப்ளே ஓவர்களில் அதிரடியாக ரன்கள் குவிக்கும் அதே வேளையில், இன்னிங்ஸை நேர்த்தியாகக் கொண்டு செல்லும் டெக்னிக் அவரிடம் மேலும் வளர வேண்டும்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும்போது “இளம் வயதிலேயே விராட் கோலி தனது ஆற்றலை எப்படிச் சரியான வழியில் பயன்படுத்திப் போட்டியைத் தன் பக்கம் திருப்பினார் என்பதைப் பார்த்து, விராட் கோலியைத் தான் சூரியவன்ஷி தனது முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
அவர் மேலும் தொடர்ந்து பேசும்போது “சூரியவன்ஷி மிகவும் திறமையான பேட்டர், அவர் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது; சரியான அணுகுமுறையைப் பின்பற்றித் தன் திறமையை வெளிப்படுத்தினால் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனைகளை அவரால் படைக்க முடியும்” எனக் கூறி முடித்துள்ளார்.