ஆஸ்திரேலியா கிடையவே கிடையாது.. இவர் தான் இந்த டி20 உலக கோப்பையில் அதிக ரன் எடுப்பார் – யுவராஜ் சிங் கணிப்பு

0
282
Yuvraj

தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு அம்பாசிடராக இந்தியாவில் இருந்து நட்சத்திர முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஐசிசியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் இறுதிப்போட்டியில் யார் விளையாடுவார்கள்? யார் அதிக ரன் அடிப்பார்கள்? என்பது குறித்து தனது கணிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்திய அணி 2007 ஆம் ஆண்டு ஐசிசி நடத்திய முதல் டி20 உலகக் கோப்பை தொடரை மகேந்திர சிங் தோனி தலைமையில் கைப்பற்றியது. அதற்கு அடுத்து இதுவரையில் இந்திய அணி ஒரு முறை கூட டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற வில்லை. இதற்குப் பிறகுதான் ஐபிஎல் தொடர் இந்தியாவில் ஆரம்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கான தகுதிகள் கொண்ட அணி தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. பெரும்பாலும் சுழல் பந்துவீச்சிக்கு நல்ல சாதகம் உள்ள நிலையில் இந்திய அணி அதை மையப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் யுவராஜ் சிங் பேசும்பொழுது ” ரிஷப் பண்ட் பெரிய காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அவர் எப்படி விளையாடுவார் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதே சமயத்தில் விராட் கோலி தான் அதிக ரன்கள் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் எடுக்கக்கூடிய பேட்ஸ்மேன் ஆக இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

நாங்கள் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றோம். பெரிய போட்டிகளை வெல்லும் தன்னம்பிக்கை இந்திய அணி இடம் இருக்கிறது. இந்திய அணி தங்களை தாங்களே நம்பிக்கையுடன் தள்ளிக் கொண்டு விளையாடக் கூடியவர்கள்.அவர்கள் எல்லா வழிகளிலும் சென்று வெல்வார்கள் என்று நம்புகிறேன். மேலும் இறுதிப்போட்டியில் ஒரு அணியாக இந்தியா இருக்கும் இன்னொரு அணியாக வெஸ்ட் இண்டீஸ் அல்லது பாகிஸ்தான் இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 5 பந்து 5 ரன்.. சூப்பர் ஓவர்.. ஒமானை வீழ்த்தி நமீபியா திரில் வெற்றி.. டி20 உலக கோப்பை

ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பை தொடர்களில் விராட் கோலி 25 போட்டிகளில் 81 ரன் ஆவரேஜில் 1141 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் கடந்த டி20 உலக கோப்பை தொடரில் 296 ரன்கள் எடுத்து அவரை அதிக ரன்கள் எடுத்தவர்களில் முதலிடத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.