5 பந்து 5 ரன்.. சூப்பர் ஓவர்.. ஒமானை வீழ்த்தி நமீபியா திரில் வெற்றி.. டி20 உலக கோப்பை

0
368
Namibia

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் பி-ல் இடம்பெற்றிருக்கும் நமீபியா மற்றும் ஒமான் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை செல்ல, நமீபியா அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆரம்பித்த இரண்டாவது நாளில் சூப்பர் ஓவர் வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. போட்டியில் முதல் பந்திலேயே ஒமான் அணியின் காசியப் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். அந்த அணிக்கு மேல் வரிசையில் இருந்து பெரிய ரன்கள் எதுவும் வரவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் 19.4 ஓவர்களில் ஒமான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு காலித் கைல் 39 பந்துகளில் 34 ரன்கள், ஜீசன் மசூத் 20 பந்துகளில் 22 ரன், அயான் கான் 21 பந்தில் 15 ரன்கள் எடுத்தார்கள். நமீபியா அணிக்கு ட்ரம்ப்பேல்மான் 4 விக்கெட்டுகள், டேவிட் வீசா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இலக்கை நோக்கி விளையாடிய நமீபியா விக்கெட்டுகளை கொடுக்கவில்லை என்றாலும் மிக மெதுவாக விளையாடியது. அந்த அணி நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்த பொழுது கடைசி ஓவருக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே தந்து ஒமான் பந்துவீச்சாளர் மெக்ரான் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. நமீபியா அணிக்கு பேட்டிங்கில் ஜான் ஃப்ரைலிங்க் 48 பந்தில் 45 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி சிறப்பாக விளையாடி 21 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்து ஒமான் அணி பேட்டிங் செய்ய வந்த பொழுது, நமீபியா அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வீசா பந்து வீசினார். அந்த ஓவரில் அவர் முதல் மூன்று பந்துகளுக்கு இரண்டு ரன் மட்டும் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றி அங்கேயே ஆட்டத்தை முடித்து விட்டார். இறுதியாக சூப்பர் ஓவரில் ஒமான் அணி ஒரு விக்கெட் இழந்து 10 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையும் படிங்க : ஜஸ்ட் 137 ரன்.. பயம் காட்டிய பப்புவா நியூ கினியா.. வெஸ்ட் இண்டீஸ் தட்டு தடுமாறி வெற்றி

இதற்கு அடுத்து நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் நமீபியா அணி திரில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டி வெஸ்ட் இண்டிஸ் பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. எதிர்பார்த்தது போலவே அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் குறைந்த ரன் கொண்ட போட்டிகள் வர ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -