இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தான் விளையாடிய காலத்தில் செய்த ஒரு தவறை கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் செய்யக்கூடாது என அறிவுரை கூறியிருக்கிறார்.
இந்த மாதம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி துவங்க இருக்கும் ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா மற்றும் கில் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவது ஏறக்குறைய உறுதியாக இருக்கிறது. எனவே இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் யுவராஜ் சிங் அறிவுரை கூறியிருக்கிறார்.
மிக முக்கிய பந்தம்
தற்போது இந்திய டி20 அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க இருக்கும் அபிஷேக் ஷர்மா மற்றும் கில் இருவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் இருவரும் சிறுவயதில் இருந்து ஒன்றாக இணைந்து விளையாடி வந்தார்கள்.
இதேபோல யுவராஜ் சிங் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் அபிஷேக் ஷர்மா தனிப்பட்ட முறையில் யுவராஜ் சிங்கிடம் பயிற்சி பெற்று வந்தார். சமயத்தில் பில் வளரும் காலகட்டத்தில் யுவராஜ் சிங் கில்லுக்கு தேவையான அறிவுரைகளை கூறி வந்தார். இந்த இரண்டு இளம் வீரர்களிடமும் யுவராஜ் சிங்குக்கு நல்ல தொடர்பு இருந்தது.
இந்த தவறை செய்ய வேண்டாம்
இது குறித்து யுவராஜ் சிங் பேசும்பொழுது “அபிஷேக் மற்றும் கில் இருவரும் கிரிக்கெட்டை தவிர்த்து கோல்ப் விளையாட்டை விளையாட வேண்டும். அந்த விளையாட்டு நல்ல ஓய்வையும் மேலும் மன புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடியது. சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு நேரம் கிடைப்பது கடினம். ஆனா அதற்கான நேரத்தை ஒதுக்கி விளையாட வேண்டும். கிரிக்கெட் வீரர்களுக்கு ஃபார்ம் இல்லாத போதும் ஓய்வு தேவை. மேலும் சிறப்பாக விளையாடினாலும் புத்துணர்ச்சியுடன் மீண்டும் விளையாட கோல்ப் விளையாடுவது அவசியம்”
இதையும் படிங்க : ஓய்வை கைவிட்ட நியூசி ராஸ் டெய்லர்.. வேறு நாட்டுக்கு ஆட முடிவு.. கிரிக்கெட் விதி அனுமதித்தது எப்படி? – முழு விவரங்கள்
“ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மாதிரியான நாடுகளில் உள்ள சிறந்த வீரர்கள் எல்லோருமே ஓய்வு நேரத்தில் கோல்ப் விளையாடுகிறார்கள். நான் இந்திய அணிக்கு விளையாடிய பொழுது கோல்ப் விளையாடி இருந்தால் இன்னும் குறைந்தது 3 ஆயிரம் ரன்கள் அதிகமாக எடுத்திருப்பேன். எனவே நான் செய்த தவறை கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் செய்யக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.
.






