ஓய்வை கைவிட்ட நியூசி ராஸ் டெய்லர்.. வேறு நாட்டுக்கு ஆட முடிவு.. கிரிக்கெட் விதி அனுமதித்தது எப்படி? – முழு விவரங்கள்

0
153
Taylor

நியூசிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ராஸ் டெய்லர் தனது ஓய்வில் இருந்து திரும்ப மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார். ஆனால் இந்த முறை நியூசிலாந்து அணிக்காக இல்லாமல் வேறு ஒரு புதிய நாட்டு அணிக்கு விளையாடுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தில் வைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ராஸ் டெய்லர் அறிவித்தார். ஸ்டீபன் பிளம்மிங் மற்றும் கேன் வில்லியம்சன் இருவருக்கும் அடுத்து நியூசிலாந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக இருந்தார்.

- Advertisement -

புதிய அணிக்காக விளையாடுகிறார்

இந்த நிலையில் மீண்டும் திரும்ப வரும் ராஸ் டெய்லர் இந்த முறை சமோவா என்கிற நாட்டுக்காக, கிழக்கு பசிபிக் ஆசிய 2026 டி20 உலகச் கோப்பை தகுதி சுற்றில் விளையாடுகிறார். இந்த தகுதி சுற்று போட்டிகள் இந்த ஆண்டு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த சமூக அணிக்கு முன்னாள் நியூசிலாந்து வீரர் தருண் நெதுலா தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் ராஸ் டெய்லரை தன்னுடைய அணிக்காக விளையாடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் தான் இன்னும் விளையாடும் உடல் தகுதியில் இருப்பதால் இதற்கு சம்மதித்ததாக ராஸ் டெய்லர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கிரிக்கெட் விதி அனுமதித்தது எப்படி?

ஒரு சர்வதேச அணிக்காக விளையாடிய வீரர் இன்னொரு சர்வதேச அணிக்காக விளையாட வேண்டும் என்றால் குறைந்தது மூன்று ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும். ராஸ் டெய்லர் ஓய்வு பெற்று சரியாக மூன்று வருடங்கள் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 330 ரன்.. கடைசி ஓவர் திரில்.. போராடி பரிதாபமாக தோற்ற இங்கிலாந்து.. தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா

மேலும் ராஸ் டெய்லர் தன்னுடைய தாயார் வழியில் சமோவா பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். எனவே இந்த இரண்டு காரணங்களாலும் அவர் புதிய அணிக்கு கிரிக்கெட் விளையாடுவது எளிதாக மாறிவிட்டது. இதைத்தொடர்ந்து கிழக்கு ஆசிய பசிபிக் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றில் சமூக அணிக்கு ராஸ் டெய்லர் விளையாடுவது உறுதி ஆகிவிட்டது.

- Advertisement -