“எப்போதுமே நீங்கதான் கிங்” – கோலி ரசிகர்கள் எவ்வளவு திட்டினாலும் சுப்மண் கில் போட்ட நெகிழ்ச்சியான கமெண்ட்!

0
5993

பதினாறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்   லீக்  ஆட்டங்கள்  நேற்றுடன்   முடிவுற்றது . இதனைத் தொடர்ந்து  குஜராத் சென்னை மும்பை மற்றும்   லக்னோ அணிகள்  தகுதி பெற்றன .

நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில்  பெங்களூர் மற்றும்  குஜராத் அணிகள் மோதின . இந்தப் போட்டியில்  குஜராத் அணி ஆறு  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இந்த தோல்வியின் மூலம் ஆர்சிபி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது .

- Advertisement -

இந்தப் போட்டியில் பெங்களூர் அணிக்காக அபாரமாக ஆடிய விராட் கோலி 101 ரன்கள் உடன் ஆட்டம் விளக்காமல் இருந்தார் குஜராத் அணியின் சார்பாக சுப்மண் கில் அபாரமாக ஆடி 52 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து குஜராத் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் . இந்த ஐபிஎல் தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும் .

கடந்த நான்கு ஐபிஎல் தொடர்களில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற பெங்களூர் அணி இந்த முறை முதல் சுற்றோடு வெளியேறியது. இதன் காரணமாக பெங்களூர் அணி ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றத்திற்கு உள்ளாயினர் 197 ரன்கள் எடுத்து வெற்றி பெறலாம் என்று இருந்த பெங்களூரு அணிக்கு கில் மற்றும் விஜய் சங்கரின் அபார் ஆட்டம் தடையாக அமைந்தது . இவர்கள் இருவரும் குஜராத் அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர் .

இந்தியா மற்றும் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் எடுத்தார் . 2016ஆம் ஆண்டை போலவே விஸ்வரூபம் எடுத்து விளையாடியதால் நிச்சயமாக அந்த அணி இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர் ஆனாலும் ஏமாற்றமே முடிவாக அமைந்தது . இதனால் ஆத்திரத்தில் இருந்த பெங்களூர் ரசிகர்கள் சுப்மண் கில்லை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

- Advertisement -

பெங்களூர் அணி போட்டியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து ரசிகர்களுக்கு மனம் உருகி பதிவு செய்திருந்தார் விராட் கோலி . அந்தப் பதிவில் தொடரில் இருந்து வெளியேறுவது மிகவும் வருத்தமான ஒன்று என்றாலும் பெரும்பாலான போட்டிகளில் சிறப்பாக விளையாடினோம் அதனால் நாம் தலைகுடிய வேண்டிய அவசியம் இல்லை என பதிவிட்டிருந்தார். மேலும் ரசிகர்களின் அன்பிற்கு எப்போதும் பெங்களூர் அணி கடமைப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார் . பயிற்சியாளர்களுக்கும் அணி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்து இருந்தார் . விராட் கோலியின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து இருந்தனர் .

இந்தப் பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள கில் நீங்கள் தான் எப்போதும் கிங் என்பது போல ராஜ கிரீட இமோஜியை விராட் கோலியின் பதிவிற்கு பதிலாக அளித்திருக்கிறார் கில் . இது அவர்களுக்கிடையேயான நட்புறவை வெளிக்காட்டுவதோடு சுப்மன் கில் விராட் கோலியின் மீது வைத்திருக்கும் மரியாதை காட்டுவதாக இருக்கிறது. பெங்களூர் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகு கில்லின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டி அடுத்த தலைமுறையை வழிநடத்துமாறு விராட் கோலி பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .