விராட் கோலிக்கு பிறகு, ருத்துராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை பார்த்தபிறகு தான் எனக்கு நல்ல பீல் கிடைக்குது – சிஎஸ்கே வீரரை புகழ்ந்த சேவாக்!

0
281

இத்தனை வருடங்களாக விராட் கோலியின் பேட்டையை பார்த்தால் இப்படியொரு உணர்வு இருக்குமோ, ருத்துராஜ் பேட்டிங் பார்க்கையில் அதே ஃபீல் வருகிறது என்று பேசியுள்ளார் சேவாக்.

மார்ச் 31ஆம் தேதி ஐபிஎல் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு லீக் போட்டிகளில் விளையாடி, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியையும் லக்னோ அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றது.

- Advertisement -

இந்த இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே அணிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் துவக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட். முதல் போட்டியில் 50 பந்துகளுக்கு 92 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 31 பந்துகளில் 57 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் கொடுத்து ஆட்டம் இழந்தார். இரண்டு போட்டிகளின் முடிவில் 149 ரன்கள் அடித்து இந்த சீசனின் ஆரஞ்சு தொப்பியை முதல் ஆளாக தன்வசம் பெற்றிருக்கிறார்.

சமீபகாலமாக இவரது பேட்டிங்கை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் விராட் கோலி உடன் ஒப்பிட்டு ருத்துராஜ் பேட்டிங்கை பாராட்டி இருக்கிறார் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் அவர் கூறியதாவது:

“பல வருடங்களாக விராட் கோலியின் பேட்டிங்கை பார்த்து வருகிறோம். அவர் அடிக்கும் ஒவ்வொரு ஷாட்டும் ஏனோ தானோ என்று இல்லாமல், பார்ப்பவர்களின் கண்களை கவரும் அளவிற்கு அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.

- Advertisement -

இத்தனை வருடங்களுக்கு பிறகு ருத்துராஜ் பேட்டிங் செய்வதை பார்க்கையில், விராட் கோலியின் பேட்டிங்கை பார்த்தபோது எப்படி இருந்ததோ, அதே பீல் கிடைத்திருக்கிறது. மிகவும் நேர்த்தியாக விளையாடுகிறார். மகேந்திர சிங் தோனியே இதனை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

வரும் காலங்களில் ருத்துராஜ் பேட்டிங்கை பார்ப்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன். நல்ல பார்மில் இருந்து வருகிறார். இந்த தொடர் முழுவதும் அதை எடுத்துச் சென்றால் கட்டாயம் இந்திய அணியில் தொடர்ச்சியான இடத்தை பெறுவதற்கு அநேக வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்த தொடரில் நான் கவனிக்க கூடிய வீரர்களில் ஒருவராக ருத்துராஜ் கட்டாயம் இருக்கிறார்.” என்று சேவாக் பேசினார்.