“ரோகித் துணி துவைக்கிற மாதிரி துவைச்சுட்டாரு.. ஸ்ட்ரீட் பவுலர்ஸ் மாதிரி காட்டிட்டாரு..!” – இந்திய முன்னாள் வீரர் அதிரடி விமர்சனம்!

0
509
Rohit

இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என தொடர்ச்சியாக மூன்று அணிகளுக்கு எதிராக அபார வெற்றி பெற்று இருக்கிறது.

இதன் காரணத்தால் இந்திய அணி தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணியின் ரன் ரேட் யாரையும் விட மிக அதிகமாக வலிமையாக இருக்கிறது.

- Advertisement -

இதற்கு மிக முக்கிய காரணமாக இந்திய அணியின் கேப்டனும் துவக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மாவின் அதிரடியான பேட்டிங் இருக்கிறது. அவர் இலக்கை நோக்கி விளையாடும் பொழுது பவர் பிளேவிலேயே ஆட்டத்தை முடித்து விடுகிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ரன்கள் ஏதும் எடுக்காமல் அவர் ஆட்டம் இழந்த பொழுது வெளியில் இருந்து கடுமையான விமர்சனங்கள் சொந்த நாட்டு ரசிகர்களாலே முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 65 பந்துகளில் சதம் அடித்தார். ஆனாலும் சிறிய அணிக்கு எதிராக மட்டுமே அவர் விளையாடுவார் என்கின்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 63 பந்துகளில் 86 ரன்கள் குவித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

நேற்று அவருடைய பேட்டிங் பற்றி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “சிறிய இலக்குகளை நோக்கி நீங்கள் விளையாடும் பொழுது சில நேரங்களில் சிக்கிக் கொள்ளலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி இரண்டு ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஆனால் நேற்று ரோகித் சர்மா துணி துவைப்பது போல அடித்தார். மைதானத்தில் எல்லா பக்கத்திலும் சிக்ஸர் பறந்தது. நாம் பெரிய பவுலர்களாக பார்க்கும் ஷாகின் மற்றும் ஹாரிஸ் ரவுப் போன்றவர்களை அடித்து நொறுக்கினார். அவர்கள் ஒழுக்கமான பந்துவீச்சாளர்களாக இருந்த போதிலும் நடைபாதை பந்துவீச்சாளர்கள் போல தெரிந்தது. எனது புத்தகத்தில் போட்டியின் வீரர் ரோகித் சர்மாதான். அது சிறந்த இன்னிங்ஸ்.

நேற்று இந்திய பந்துவீச்சாளர்களுக்கு இடையே ஜனநாயக முறைப்படி தலா ஆளுக்கு இரண்டு விக்கெட் என பகிர்ந்து கொண்டார்கள். இந்த இடத்தில் அணியில் சர்துல் எதுக்கு என்ற கேள்வி இருக்கிறது. அவர் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். தோல்வியிலிருந்து பாடம் கற்பது வேறு வெற்றியில் இருந்து பாடம் கற்பவர்களே சாம்பியன் ஆவார்கள்!” என்று கூறியிருக்கிறார்!