ரோகித் அணி, விராட் கோலி அணி என்று இரண்டாக பிரிந்து கிடந்தது இந்தியா; அதை ரவி சாஸ்திரி எப்படி கையாண்டார்? – முன்னாள் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் பேட்டி

0
794

ரோகித் சர்மா அணி, விராட் கோலி அணி என்று இரண்டாகப் பிரிந்து கிடந்ததாக கூறப்பட்ட இந்திய அணியை ரவி சாஸ்திரி எப்படி சமாளித்தார் என்று தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் ஆர் ஸ்ரீதர்.

இந்திய அணிக்குள் ஆளுமை மிக்க சீனியர் வீரர்களாக இருந்து வருபவர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி. ரோஹித் சர்மா 2007ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். விராட் கோலி 2008 ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். இருவரும் நீண்ட காலம் இந்திய அணியுடன் பயணித்து வரும் அனுபவம் மிக்க சீனியர் வீரர்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

கடந்த 2019ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணி அரைஇறுதி சுற்றுடன் வெளியேறியது. அதன் பிறகு பத்திரிக்கைகளில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மத்தியில் சரியான நட்புறவு இல்லை. இந்திய அணி இரண்டு அணிகளாக பிரிந்து கிடக்கிறது என்கிற விமர்சனங்கள் எழுதப்பட்டன.

இந்நிலையில் இப்படி எழுந்த விமர்சனங்களுக்கு ரவி சாஸ்திரி எவ்வாறு ரியாக்ட் செய்தார்? மற்றும் இந்த பிரிவு விவகாரத்தை எப்படி கையாண்டார்? என்பது பற்றி இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

“2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியை இந்திய அணி இழந்ததற்கு முக்கிய காரணம் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் நிலவி வரும் வீரர்கள் மதிரியிலான பிரிவுதான் காரணம் என்று தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

- Advertisement -

அணிக்குள் ரோகித் சர்மா அணி, விராட் கோலி அணி என்று பிரிந்து கிடப்பதாகவும், ஒருவர் மற்றொருவரை சமூகவலைத்தளங்களில் அன்பாலோ செய்துள்ளனர் என்றும் தகவலகள் வந்தது. இதை இப்படியே விட்டால் இன்னும் சிக்கலான பிரச்சினையாக மாறிவிடும் என்று உணர்ந்தோம்.

டி20 உலக கோப்பை முடிந்து சரியாக 10 நாட்கள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக அமெரிக்கா சென்றோம். அப்போது ரவி சாஸ்திரி இருவரையும் தனது அறைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் ஒரே பக்கம் நின்று செயல்பட்டால் மட்டுமே இந்திய அணிக்கு ஆரோக்கியமானதாக இருக்கும் என்றார்.

சமூக வலைதளங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் நீங்கள் இருவரும் இந்திய அணிக்குள் இருக்கும் மிகுந்த அனுபவம் மிக்க சீனியர் வீரர்கள். நீங்கள் இதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தை இப்போதே ஒதுக்கி தள்ளிவிட்டு, இருவரும் ஒன்றாக செயல்படுவது தான் எனக்குத் தேவை என்று திட்டவட்டமாக அவரது பாணியில் கூறினார்.”

“அதன்பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே பிரிவு இருப்பதாக இபோதுவரை நான் செய்திகளை பார்க்கவில்லை. ரவி சாஸ்திரி லாவகமாக நேரத்தை வீணடிக்காமல் இந்த விஷயத்தை கையாண்டார்.” என தனது புத்தகத்தை எழுதியுள்ளார் ஆர் ஸ்ரீதர்.