நீங்களா சொல்றது?.. “T20i வேற.. ஐபிஎல் வேற.. ரெண்டையும் குழப்பக் கூடாது” – இந்திய முன்னாள் வீரர் ஓபன் டாக்!

0
144
Indvswi2023

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது!

இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத விதத்தில் வெஸ்ட் அணியிடம் மிக மோசமாக விளையாடி தோற்றது. இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெல்வதற்கு வாய்ப்புகள் இருந்தும் தவறான முடிவுகளால் தோற்றது!

- Advertisement -

இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான இசான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களுடைய தரத்திற்கு ஏற்ற வகையில் விளையாடவில்லை. மேலும் கடந்த 16 சர்வதேச டி20 போட்டிகளாக இசான் கிஷானின் பேட்டிங் மிக மோசமாகவே இருந்து வந்திருக்கிறது.

இந்த காரணத்தால் மூன்றாவது போட்டியில் அவரை நீக்கிவிட்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக வரும் ஜெய்ஸ்வாலை இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தியது இந்திய கிரிக்கெட் நிர்வாகம்!

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ” சூரியகுமார் யாதவ் மட்டும் ஆரம்பத்தில் சிக்கவில்லை. இசான் கிசானுக்கும் சிரமங்கள் இருக்கிறது. அவரும் முதல் இரண்டு போட்டிகளில் நன்றாக துவங்கவில்லை. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டையும் ஐபிஎல் தொடரையும் ஒன்றாக வைத்து குழப்பிக் கொள்ளக் கூடாது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் உங்களுக்கு 14 போட்டிகள் கொண்ட நீளமான சீசன் இருக்கிறது. நீங்கள் முன்வரிசையில் பேட்டிங் செய்து அணியின் முக்கியமான வீரராக இருந்தால், மும்பை அணிக்கு இஷான் இருப்பது போல இருந்தால் உங்களிடம் நிரந்தரம். ஏனென்றால் நீங்கள் விளையாட அதிக போட்டிகள் கிடைக்கும், நீங்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் உங்களது ரிதத்தை கண்டுபிடித்து மீண்டும் வந்து விடலாம்.

ஆனால் இப்பொழுது நீங்கள் விளையாடுவது சர்வதேச டி20 கிரிக்கெட். இது பெரும்பாலும் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் வருகிறது. நீங்கள் அந்தந்த தொடர்களில் சரியாக துவங்கவில்லை என்றால், போட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், உங்களிடம் உறுதியானதாக இருக்காது. உங்களுக்கு சந்தேகங்கள் உருவாகும். உங்கள் இடத்திற்கு ஒருவர் உங்கள் அணியில் காத்துக் கொண்டிருப்பார்.

எனவே இப்படி யாராவது காத்திருந்து உங்கள் மீது அழுத்தம் உருவானால், உங்களுடைய டெம்ப்ளேட் என்ன என்பதை நீங்கள் மறந்து விடுவீர்கள். தற்போதைய தொடரை மட்டும் பார்த்தால் அவர் இரண்டு போட்டிகளில் மட்டும்தான் விளையாடி இருக்கிறார். அவர் விளையாடிய பந்துகளில் 50 சதவீதம் டாட் பந்துகளாக இருந்திருக்கின்றன. அவர் அவற்றை விளையாடிய ரன்கள் ஆக மாற்றவில்லை!” என்று கூறியிருக்கிறார்!