“தோத்துட்டு சாக்கு சொன்னிங்களே.. இப்ப என்ன சொல்லுவிங்க?” – சேவாக் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மீது அதிரடி தாக்கு!

0
1208
Sehwag

நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குறித்தான நிறைய சலசலப்பான சம்பவங்கள் தொடருக்கு முன்பு இருந்து அரங்கேறி வருகின்றது.

இந்த உலகக் கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பாகவே பாகிஸ்தான் அணிக்கு கொடுக்கப்பட்ட போட்டி அட்டவணைகளில் உடன்பாடு இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடம்பிடித்து வந்தது.

- Advertisement -

ஆனால் ஐசிசி மற்றும் பிசிசிஐ இரண்டு அமைப்புகளும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிடிவாதத்தை அலட்சியப்படுத்தி அட்டவணையை மாற்ற முடியாது என்று கூறிவிட்டனர்.

இதற்கடுத்து பாகிஸ்தான் அணி இந்தியா வருவதற்கு விசா இந்திய தரப்பில் தாமதப்படுத்தப்பட்டது பிரச்சினையானது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டது.

மேலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி அகமதாபாத்தில் நடந்த பொழுது அங்கு சில ரசிகர்களின் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தது. இதற்கு இந்தியாவிலிருந்து எதிர்ப்பு வந்தது.

- Advertisement -

அப்போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், எங்களை மைதானத்தில் ஊக்கப்படுத்தும் விதமாக எந்த நிகழ்வுகளும் நடக்க அனுமதிக்கப்படவில்லை. எங்களுக்கான பாடல் கூட மைதானத்தில் ஒலிக்கப்படவில்லை, இது ஐசிசி நிகழ்வா இல்லை பிசிசிஐ நிகழ்வா என்று தெரியவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் அணி இடம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்திருக்கிறது. இது உள்ளே வெளியே என்று பல விமர்சனங்களை அந்த அணி மீது கொண்டு வந்திருக்கிறது.

இதுகுறித்து ட்விட் செய்துள்ள சேவாக் கூறும்பொழுது “பாகிஸ்தான் ஒரு கணிக்க முடியாத பக்கமாகும். ஆனால் அவர்களின் முந்தைய தோல்விகளுக்கு நொண்டி சாக்குகளை கூறி வந்தார்கள். அதே சமயத்தில் அவர்கள் தங்களுடைய பலவீனங்களில் கவனம் செலுத்தவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு என்ன ஒரு பெருமையான நாள்! அவர்கள் பலமுறை பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியை நெருங்கி வந்தார்கள். ஆனால் இந்த முறை தொட்டு விட்டார்கள்!” என்று கூறி இருக்கிறார்!