“தப்பு பண்ணிட்டீங்க.. என் மருமகன் கேப்டனாக வேண்டாம்.. இந்த வீரர்தான் வரனும்” – சாகித் அப்ரிடி அதிரடி!

0
536
Shahid

பாகிஸ்தான் கிரிக்கெட், நடந்து முடிந்த ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு பின்பாக மிகவும் குழப்பமான நிலையில் காணப்பட்டது.

அந்த அணி எதிர்பார்த்ததை விட மிக மோசமாக செயல்பட்டது, உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது, இதுவெல்லாம் சேர்ந்து மூன்று வடிவத்திலும் கேப்டனாக இருந்த பாபர் அசாமை கீழே இறக்கி விட்டது.

- Advertisement -

மேலும் அதிரடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலும் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். தேர்வு குழு தலைவராக வஹாப் ரியாஸ் கொண்டுவரப்பட்டார்.

பாகிஸ்தான் அணிக்கு சிவப்புப் பந்தில் ஷான் மசூத் புதிய கேப்டனாகவும், வெள்ளைப் பந்தில் ஷாகின் ஷா அப்ரிடி புதிய கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்கள். தற்பொழுது பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவில் விளையாடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஷாகின் ஷா அப்ரிடி கேப்டன்ஷியில் பாகிஸ்தான் அணி இன்னும் விளையாடாமல் இருக்கிறது. மேலும் டி20 உலகக் கோப்பை வர இருக்கின்ற காரணத்தினால், பாகிஸ்தான் டி20 அணி எப்படி செயல்பட இருக்கிறது என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியால் டி20 உலகக்கோப்பையை வெல்ல மட்டுமே அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. மற்ற இரண்டு வடிவங்களிலும் உலகக் கோப்பையை வெல்வதற்கு தேவையான திறமை கொண்ட வீரர்கள் பற்றாக்குறையாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருக்கிறார்கள்.

தற்பொழுது ஷாகின் ஷா அப்ரிடி கேப்டனாக கொண்டுவரப்பட்டது குறித்து அவருடைய மாமா ஷாஹித் அப்ரிடி பேசும்பொழுது “முகமது ரிஸ்வானின் கடின உழைப்பையும் அவரது ஃபோக்கஸ் லெவலையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். அவருடைய சிறந்த குணம் எனக்கு மிகவும் பிடித்தமானது.

அவர் எப்பொழுதுமே விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். யார் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து அவர் கண்டு கொள்வதில்லை. அவர் உண்மையில் ஒரு போராளி. நான் அவரையே டி20 கேப்டனாக பார்க்க விரும்புகிறேன். தவறாக ஷாஹீன் அப்ரிடி கேப்டனாக ஆக்கப்பட்டிருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!