மத்த டீமை விட சிஎஸ்கே அப்படி என்ன ஸ்பெஷல்ன்னு நெனச்சு தான் உள்ள வந்தேன், இப்போ வேற டீமுக்கு போகவே மனசில்ல – நடந்ததை பகிர்ந்த மொயின் அலி!

0
4612

சிஎஸ்கே அணி இப்போது எனக்கு குடும்பம் போல மாறிவிட்டது என மனம் திறந்து பேசியுள்ளார் மொயின் அலி.

மொயின் அலி, 2021 ஆம் ஆண்டு ஆர்சிபி அணியிலிருந்து சிஎஸ்கே அணிக்கு வந்தார். இவரை நம்பர் 3 இடத்திற்கு முன்னேற்றி விளையாட வைத்து வருகிறது. 15 போட்டிகளில் கிட்டத்தட்ட 360 ரன்கள் அடித்து, 135 ஸ்ட்ரைக் ரேட்டில் 25.56 ரன்கள் சராசரியாக வைத்திருக்கிறார். அந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கும் அவ்வப்போது கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வருகிறார் மற்றும் சில அணிகளிலும் கேப்டனாக இருந்து வருகிறார். சிஎஸ்கே அணியில் இருக்கும் பொழுது, தோனியிடம் கேப்டன் பொறுப்பு பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். அவர் என்னை பல வகைகளில் மெருகேற்றியுள்ளார் என பேசியிருக்கிறார் மொயின் அலி. மேலும் தனக்கு சிஎஸ்கே ஒரு குடும்பமாகவே மாறிவிட்டதாகவும் கூறினார்.

மொயின் அலி பேசியதாவது: “முதலில் நான் சிஎஸ்கே அணிக்கு வந்தபோது அங்கு சென்ற பலரும் பெருமிதமாக கூறியிருக்கிறார்களே, அப்படி என்ன இருக்கிறது? என சந்தேகத்துடன் தான் வந்தேன். ஆனால் தற்போது சிஎஸ்கே அணி

- Advertisement -

எனக்கு சிஎஸ்கே ஒரு குடும்பமாகவே மாறிவிட்டது. ஒவ்வொரு சீசனும் அங்கே வந்து விளையாடுவதற்கு பேரார்வத்துடன் இருக்கிறேன். அந்த குறிப்பிட்ட காலகட்டம் எனக்கு பணிச்சுமை இருப்பது போலவே தெரியாது.

அத்துடன் தோனியிடம் பலவிதமாக நான் தனிப்பட்ட முறையில் பேசி இருக்கிறேன். கேப்டன் பொறுப்பு பற்றி வெளிப்படையாக நான் கேட்டிருக்கிறேன். அவரும் எவ்வித ஒளிவு மறைவும் இன்றி பேசியிருக்கிறார். அதேபோல் பேட்டிங் பற்றியும், துணிச்சலாக பந்துகளை எதிர்கொள்வது பற்றியும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளேன். அது எனக்கு சிஎஸ்கே அணியில் மட்டுமல்ல வெளியில் பல அணிகளில் விளையாடும்போதும் உதவி இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு வந்தாலே நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளலாம். உங்களை ஒரு குடும்பமாக உணர வைப்பார்கள் என்பதை தனிப்பட்ட முறையில் நான் உணர்ந்து கொண்டேன்.”

நடந்து முடிந்த ஐபிஎல் ஏலம் சிஎஸ்கே அணிக்கு நன்றாகவே அமைந்திருக்கிறது. ஸ்டோக்ஸ் அணிக்கு வந்திருக்கிறார். அவருடன் சிஎஸ்கே அணியில் இணைந்து பணியாற்றுவதற்கு ஆவலாக உள்ளேன்.” என்றார்.

- Advertisement -