இவர்கள் கோப்பையுடன் வருவார்கள் என 10 வருடங்கள் நம்பியது போதும்… இனி அணியில் அதிரடி மாற்றம் தேவை! – கங்குலி காரசாரமாக பேட்டி!

0
1853

10 வருடங்கள் ஐசிசி கோப்பையை வெல்லவில்லை என்பது மிகப்பெரிய இடைவெளி விரைவாக இந்திய அணியில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து வெற்றிக்கு வழி வகுக்க வேண்டும் என்கிற பாணியில் பேசி உள்ளார் பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இந்திய அணிக்கு படுமோசமாக அமைந்தது. போட்டியின் முதல் நாளிலிருந்து இந்திய அணி பெருத்த பின்னடைவை சந்தித்தது. கடைசி வரை அதிலிருந்து மீள முடியாமல் இறுதியாக ஆஸ்திரேலியா அணியிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

கேப்டன் ரோகித் சர்மா அணியை வழி நடத்திய விதம் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இதனால் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், விமர்சனங்கள் என பலரும் ரோகித் சர்மா தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும். பிசிசிஐ உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றர்.

இந்திய அணி கடைசியாக ஐசிசி தொடர்களில் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன்பிறகு எந்தவித ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் வென்று அந்த வறட்சியை போக்குவார்கள் என எதிர்பார்த்து இருந்தபோது அது நிறைவேறவில்லை.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு, அதற்கு கருத்து தெரிவித்த முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி, 10 வருடங்கள் கோப்பை இல்லாமல் இந்திய அணி இருப்பது முற்றிலும் சரியானது அல்ல; மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என பேசி உள்ளார்.

- Advertisement -

“இந்தியா போன்ற பலமிக்க அணி திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. இப்படி இருக்க, 10 வருட இடைவெளி என்பது மிகப்பெரியது. அவர்கள் நன்றாக விளையாடாமல் இல்லை. நான்கு முறை பைனல் மற்றும் நான்கு முறை செமி பைனல் என அனைத்து தொடர்களிலும் நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார்கள். முக்கியமான ஓரிரு போட்டிகளில் நன்றாக விளையாட தவறியது இத்தகைய பின்விளைவை கொடுத்திருக்கிறது.

அணியில் நல்ல மனநிலையை உருவாக்கி சில மாற்றங்களை கொண்டு வந்து கோப்பையை வெல்வதற்கு பிசிசிஐ வழிவகை செய்ய வேண்டும். அதற்கான கட்டமைப்பு இந்திய அணியில் நன்றாகவே இருக்கிறது. வரும் காலங்களில் கோப்பையை வெல்வது முக்கியம். குறிப்பாக இந்த வருடம் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெறுகிறது. கோப்பை வெல்வதற்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை நழுவவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை உடனடியாக செய்ய வேண்டும்.” என்று பேசினார்.