சேப்பாக்கம் பிட்ச்சுல பத்ரிநாத் சொன்ன மாதிரிதான் ஆடணும் – அஸ்வின் சொன்ன ருசிகர தகவல்!

0
1231
Ashwin

ஐபிஎல் 16வது சீசனின் ஆறாவது போட்டி நேற்று சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே மிகவும் பரபரப்பாக சுவாரசியமாக, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கிறது!

இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் சேர்த்து சேப்பாக்கம் மைதானத்தில் அதிகபட்ச பவர் பிளே ரண்களை பதிவு செய்தது!

- Advertisement -

அடுத்த ஒன்றரை மணி நேரங்களில் இந்த சாதனையை லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி உடைத்து பவர் பிளேவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்தது. ஆனால் இந்த பெரிய தொடக்கத்தை அந்த அணி பயன்படுத்திக் கொள்ளாமல் தேவையற்று விளையாடி தோல்வியை தழுவியது.

எட்டு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்த லக்னோனி அதற்கடுத்து பத்து ஓவர்களில் 106 ரன்களுக்கு மேற்கொண்டு மூன்று விக்கெட்டுகளை இழந்து தோல்விக்கான வலிமையான அடித்தளத்தை கட்டிக்கொண்டது. இதற்குக் காரணம் சென்னை ஆடுகளம் எப்படி ரியாக்ட் செய்யும் என்கின்ற புரிதல் இல்லாமல் இது நடந்தது.

இது குறித்து பத்ரிநாத் தன்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு சுவாரசியமான தகவலை ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்திருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது ” சென்னை ஆடுகளத்தில் விளையாடும் பொழுது அது சென்னை டிராபிக்கில் வண்டி ஓட்டுவது போல. டிராபிக்கில் சிக்குவோம் பிறகு டிராபிக் குறைந்து முதல் கியர் இரண்டாம் கியர் அப்படியே நான்காவது கியருக்கு போவோம். பிறகு அங்கு ஒரு சிக்னல் வரும். அங்கு நிறுத்தி காத்திருந்து பிறகு பொறுமையாக கியர் மாற்றி மேலே போக வேண்டும். இந்த முறையில்தான் சேப்பாக்கம் ஆடுகளத்தில் விளையாட வேண்டும் என்று பத்ரிநாத் என்னிடம் சொல்லுவார். நேற்று இப்படித்தான் நடந்தது. ஆனால் இது தெரியாமல் லக்னோ அணி சிக்கிக் கொண்டது!” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று லக்னோ அணி பவர் பிளே முடிந்ததும் அடுத்த நான்கு ஓவர்களுக்கு வெறும் 30 ரன்கள் எடுத்தால் போதும் என்று நினைத்து விக்கெட்டை விடாமல் களத்தில் நின்று தட்டி விளையாடி இருந்தால், அடுத்த பத்து ஓவர்களுக்கு மீதி வி lக்கெட்டை வைத்து சுலபமாக வென்று இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.