“நீங்க ஒன்னும் செட்டில் டீம் கிடையாது ரெஸ்ட் எடுக்க!” – தொடர்ச்சியாக தாக்கும் கவுதம் கம்பீர்!

0
491
Gambhir

இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை தொடரை வென்று ஏறக்குறைய 12 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்று இருந்தது!

இதற்குப் பிறகு 2013 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் ஐசிசி நடத்தும் சாம்பியன் டிராபி தொடரை வென்றது வந்தது. இதுதான் இந்திய அணி வென்ற கடைசி ஐசிசி தொடராகும்.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய அணி எந்த ஒரு ஐசிசி தொடரையும் வெல்லவில்லை. இதற்கு அடுத்து விராட் கோலி இரண்டு உலகக் கோப்பை தொடர்களை கேப்டனாக இருந்து சந்தித்து ஒன்றில் அரையிறுதியிலும் மற்றொன்றில் முதல் சுற்றோடும் வெளியேறி வந்தார்.

இதற்கு அடுத்து ரோகித் சர்மா தலைமையில் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினாலும், அரையிறுதி போட்டியில் மிகவும் மோசமான முறையில் ஆட்டத்தை அணுகி படுதோல்வி அடைந்து வெளியேறியது.

தற்பொழுது இந்திய அணி 2011 ஆம் ஆண்டை போல 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியாவில் வைத்து விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இதை நோக்கி இந்திய அணி தயாராகி வருகிறது.

- Advertisement -

இது குறித்து கௌதம் கம்பீர் சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார். அவர் கூறும் பொழுது
” நாம் இப்பொழுது வருகின்ற உலக கோப்பைக்காக ஒரு நிரந்தர அணியை கண்டறிய வேண்டும். தற்பொழுது நிறைய மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. நாம் உலகக் கோப்பைக்கு தயாராக இருக்கின்ற ஒரு அணி கிடையாது. இதனால் மீது உள்ள நேரத்தில் யாரும் இடைவேளை எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு சரியான அணி கலவையை உண்டாக்க ரோஹித் சர்மா விராட் கோலி யாராக இருந்தாலும் ஓய்வு இல்லாமல் தொடர்களில் பங்கேற்றால்தான் கண்டறிய முடியும். இதன் மூலம்தான் இவர்கள் சீரான கிரிக்கெட் விளையாட முடியும்” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” அணியில் யாராலும் ஓய்வு எடுக்க முடியாது. அப்படி ஓய்வு எடுத்தால் உலகக்கோப்பை உங்களுக்கு மிக அருகில் இருக்கும் பொழுது நீங்கள் இன்னும் ஒரு செட்டிலான டீம் இல்லை என்று புரிந்து கொள்வீர்கள். பிறகு அதிலிருந்து மாற்றங்களை செய்வீர்கள். ஆனால் அது வேலை செய்யாது. இதுதான் கடந்த 50 ஓவர் மற்றும் டி20 உலகக் கோப்பையிலும் நடந்தது. வருகின்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு நமது அணி வீரர்கள் இப்படி எதுவும் செய்ய மாட்டார்கள்” என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்!