இந்த தவறை திருத்திக்கொண்டால், ரோகித் சர்மாவும் தோனி போல வரலாம்! – அப்படி என்ன தவறு? சுட்டிக்காட்டிய முகமது கைப்!

0
203

ராகுல் டிராவிட் போன்ற பயிற்சியாளர் அணியில் இருக்கிறார். மேலும் சில அடிப்படை தவறுகளை சரி செய்தால் ரோகித் சர்மாவும் இந்திய அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக வருவார் என்று கருத்து தெரிவித்துள்ளார் முகமது கைப்.

ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு எதிர்பார்த்த அளவிற்கு, முக்கியமான போட்டிகளில் சரியாக முடிவுகளை இந்திய அணிக்கு சாதகமாக கொண்டு வர முடியவில்லை.

- Advertisement -

2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் அரையிருதியுடன் வெளியேறியது. அதற்கு முன்பு ஆசியக்கோப்பையிலும் தோல்வியை சந்தித்தது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்து கோப்பையை இழந்தது.

இந்த வருடம் 50 ஓவர் உலகக்கோப்பை வரவிருக்கிறது. அதில் ரோகித் சர்மா எப்படி செயல்படுவார்? அணியை வழிநடத்தி கோப்பையை வெல்வதற்கு வழிவகை செய்வாரா? என்கிற பல்வேறு சந்தேகங்களுடன் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்திய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. தோனி தலைமையிலான இந்திய அணி மூன்று வித ஐசிசி கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டார். அவருக்குப் பிறகு வந்த விராத் கோலி மற்றும் தற்போது ரோகித் சர்மா இருவரும் கோப்பைகளை வென்று தர முடியாமல் தவிக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ரோகித் சர்மா செய்யும் சிறிய தவறுகளை சரி செய்து கொண்டால் மகேந்திர சிங் தோனியை போல வெற்றிகரமான கேப்டனாகவும் வரலாம். மேலும் கோப்பைகளையும் பெற்று தரலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் முகமது கைப்.

“தோனி சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அதே நேரம் ரோகித் சர்மா போன்ற கேப்டனும் சிறப்பாக செயல்படுவதற்கு அத்தனை அம்சங்களும் இருக்கின்றன. மேலும் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கிறார் இதற்கு மேல் என்ன வேண்டும்?.

தோனி ஐசிசி தொடர்களில் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். ரோகித் சர்மா போன்ற வீரர் தோனியை போன்று வெற்றிகரமான கேப்டனாக வருவதற்கு அத்தனை திறமைகளையும் தகுதிகளையும் கொண்டிருக்கிறார். மேலும் இந்திய அணியில் ஐசிசி கோப்பைகளை வெற்றி பெற்று கொடுக்கும் அளவிற்கு அபார திறமை கொண்ட வீரர்களும் இருக்கின்றனர்.

அதேநேரம் தோனி சிறிய தவறுகளை ஒருபோதும் செய்ய மாட்டார். தன்னுடைய பிளையிங் லெவன் எது என்பதில் மிகவும் தெளிவாகவும் அவர்களுக்கென்று திட்டங்களையும் வைத்திருப்பார். ஆனால் ரோகித் சர்மா கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் சகல் எடுப்பதற்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை அழைத்துச் சென்றார். இந்த இடத்தில் தவறு செய்து விட்டார் என்று உணர்கிறேன்.

வருகிற உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. மைதானத்தின் கண்டிஷன் நன்கு உணர்ந்திருப்பார். ஆகையால் அதற்கேற்றவாறு அணியை தேர்வு செய்து கோப்பையை வெல்வதற்கு ரோகித் சர்மா முனைப்பு காட்டுவார் என்று எதிர்பார்க்கிறேன். தோனி எப்படி தன்னுடைய அடிப்படை தவறுகளை ஒருபோதும் செய்ய மாட்டாரோ, அதேபோல் ரோகித் சர்மாவும் சில தவறுகளை தவிர்த்து வந்தால் வெற்றிகரமான கேப்டனாக வலம் வருவார்.” என்று முகமது கைப் பேசினார்.