பார்மில் இல்லாத ரோகித் சர்மா, கேஎல் ராகுலுக்கு ஏகப்பட்ட சான்ஸ் கொடுத்த நீங்க.. செம்மை பார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன், ஷிக்கர் தவானுக்கு ஏன் அதைச் செய்யல? – ஹர்பஜன் சிங் சரமாரி கேள்வி!

0
86

கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் ஃபார்மில் இல்லாத போதும் நிறைய வாய்ப்புகள் கொடுத்த பிசிசிஐ, நல்ல ஃபார்மில் இருந்த சஞ்சு சாம்சன் மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்கு ஏன் போதிய வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் சிலர் பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர். குறிப்பிடத்தக்கவிதமாக, ருத்துராஜ், விளையாடிய 2 போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தினர். ஷிக்கர் தவான் முதல் போட்டியில் 40 ரன்கள், இரண்டாவது போட்டியில் 56 பந்துகளில் 86 ரன்கள் அடித்து அணிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி 54 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சன், இரண்டாவது லீக் போட்டியில் இக்கட்டான சூழலில் இருந்தபோது 25 பந்துகளில் 42 ரன்கள் விளாசி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

இப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய வீரர்களுக்கு, முன்னர் இந்திய அணியில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஓரிரு போட்டிகளில் சோதப்பியவுடன் உடனடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டு வேறு சில வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தை குறிப்பிட்டு கேஎல் ராகுல், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு நீண்ட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு மட்டும் ஏன் உடனடியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு விட்டது என்று கேள்விகள் எழுப்பியுள்ளார் ஹர்பஜன் சிங். அவர் பேசியதாவது:

- Advertisement -

“இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன்களில் ஒருவராக ஷிகர் தவான் இருந்து வந்தார். உடனடியாக அடுத்த தொடரிலேயே அணியில் இருந்து நீக்கப்பட்டு மொத்தமாக இடமே இல்லாத அளவிற்கு புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். சீனியர் வீரரை பிசிசிஐ இப்படி நடத்துவது முற்றிலும் சரியானது அல்ல.

ஐபிஎல் போட்டிகளில் இப்போது 56 பந்துகளில் 86 ரன்கள் அடித்து மிக முக்கிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்னும் சிறந்த காமில் இருக்கிறார். இவரை மோசமாக நடத்துவதை எவராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இவர் அணியின் மிகப்பெரிய வீரர் இவருக்கு இப்படி நடந்திருப்பது மற்றும் வீரர்களுக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும். அணிக்காக போராடி வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் வீரர்களிடம் பிசிசிஐ இவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது.

சஞ்சு சாம்சன் அணியில் இருந்தபோது நன்றாக விளையாடி வந்தார். அவருக்கும் போதிய வாய்ப்புகள் கொடுக்காமல் பெரிய தொடர்களில் அவரை எடுக்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. ஏன் இவர்களுக்கு போதிய அளவில் வாய்ப்புகள் கொடுக்கவில்லை.

கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் பார்மில் இல்லாதபோது நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருவதைப்போல இவர்களுக்கும் கொடுத்திருந்தால் சரியான முடிவாக இருந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லையே. ஏன் இவர்கள் மீது பாரபட்சம். இந்திய அணியில் இடம் கொடுத்து நிறைய வாய்ப்புகள் இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.” என்று பேசினார்.