இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் பட்டியலை இன்று அறிவித்தது பிசிசிஐ. இந்த அணியானது 2025 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை மனதில் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது .
இளம்பிரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் என கலவையாக இந்த அணி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . சமீபகாலமாக உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ருத்ராஜ் மற்றும் ஜெய் ஸ்வால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது .
ஆயினும் இந்திய அணியின் தூணாக விளங்கிய புஜாராவை அணியில் இருந்து விலகி இருப்பது பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது . இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து புஜாரா நீக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் . கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் இதுபுஜாராவின் முடிவு என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர் .
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும் தொகுப்பாளருமானர்ஷா போக்லே, புஜாரா அணியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது பற்றி தனது கருத்தினை பதிவு செய்து இருக்கிறார் . இது பற்றி பேசி இருக்கும் அவர் மேற்கிந்திய தீவுகள் அணைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாரா நீக்கப்பட்டிருப்பதை அவருடைய முடிவாக நான் பார்க்கவில்லை நிச்சயமாக அவர் மீண்டும் பணிக்கு திரும்புவார் என்று நம்பிக்கை தெரிவித்தார் .
இதுபற்றி தொடர்ந்து பேசிய வர்ஷா ” கடந்த முறை அஜிங்கியா ரஹானே அணியிலிருந்து நீக்கப்பட்ட போது அவருக்கு முடிவுரை எழுதினார்கள் ஆனால் தன்னுடைய திறமையான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடியதோடு தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார் . இதேபோன்று புஜாராவும் அணிக்கு மீண்டும் திரும்புவார்” என நம்பிக்கை தெரிவித்தார்
புஜாராவின் ஆட்டம் கடந்த சில வருடங்களாகவே விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது . கடந்த மூன்று வருடங்களில் அவர் ஒரே ஒரு சதம் மட்டுமே அடித்திருக்கிறார். இந்தியாவில் வைத்து நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . இதன் காரணமாக அவரை பிசிசிஐ மிஸ்டேன்டிஸ் தொடரிலிருந்து நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது