“டீம் ஜெயிக்கிறதுக்கு வீட்ல இருக்க மாதிரி செட் பண்ணி தர முடியாது” – அஷ்வின் கருத்துக்கு இந்திய முன்னாள் வீரர் தாக்கு!

0
871
Ashwin

உலகின் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவராக தற்பொழுது விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார். அவர் இரண்டாவது டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அணியில் தேர்வு செய்யப்படாமல் வெளியில் வைக்கப்பட்டார். இது அந்த நேரத்தில் மிகப்பெரிய சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியது!

இதற்கு அடுத்து இது குறித்து மனம் திறந்து பேசிய அஸ்வின், அந்த நிகழ்வு தன்னை பாதித்ததாகவும், அதே சமயத்தில் அப்படி நடக்கலாம் என்று தான் எதிர்பார்த்ததாகவும், எனவே அதனால் தான் அதிலிருந்து வெளியே வந்து விட்டதாகவும், மேலும் தன் குடும்பத்தினருக்காக சீக்கிரத்தில் இதையெல்லாம் விட்டு வெளியே வர வேண்டும் என்றும் பேசி இருந்தார்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணியின் உள் சூழ்நிலையை வைத்து பேசும் பொழுது, முன்பு எல்லாம் அணி வீரர்கள் நண்பர்களாக இருந்தார்கள்; ஆனால் தற்போது எல்லோரும் தனித்தனியே இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இது ரசிகர்களிடையே பல்வேறு யூகங்களை கிடப்பியிருந்தது.

இந்த நிலையில் இது குறித்து தற்பொழுது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஏபி டிவில்லியர்ஸ் கூறிய ஒரு கருத்தை முன்வைத்து அஸ்வின் கருத்துக்கு மறுப்பு கருத்து கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” வெற்றிகரமான ஆஸ்திரேலியா அணி இருந்ததை வைத்து ஏபி டி வில்லியர்ஸ் கூறியது முற்றிலும் உண்மை. அவர்களில் ஒருவருக்கு ஒருவர் பிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் மைதானத்திற்குள் நுழைந்தவுடன் அதை எல்லாம் விட்டுவிட்டு சிறப்பாக செயல்பட ஆரம்பித்து விடுவார்கள். அதை எதனாலும் தடுக்க முடியாது. இது ஒன்றல்ல இது மாதிரி நிறைய அணிகளில் நடக்கும். அணிகள் வெற்றி பெற வேண்டும் என்றால் குடும்பத்தில் உள்ள சூழ்நிலை போல இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

நான் மாநில கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக பல ஆண்டுகள் விளையாடினேன். என்னுடைய மிக நெருங்கிய நண்பர்களும் அந்த அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்தார்கள். ஆனால் நீங்கள் உங்களுடைய வேலையை செய்கிறீர்கள். எல்லோரும் முன்னேற வேண்டும் என்பது போன்ற ஒரு உணர்வு. அங்கு போட்டி கழுத்துக்கு கழுத்து இருந்தது. எல்லோரும் ரன்கள் அடிக்க வேண்டும் ஆனால் அதில் நான் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்கின்ற சூழல் இருந்தது.

பிறகு இரண்டு மூன்று வருடங்கள் மாநில கிரிக்கெட்டில் நான் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினேன். அந்த அணியில் நான் டெல்லி அணியில் பார்த்ததற்கு எதிர் சூழ்நிலையை பார்த்தேன். அங்கு தன்னுடைய சக வீரர் மகிழ்ச்சியாக இருந்தால் அவரைப் பார்த்து மற்ற எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். நான் இருந்த ட்ரெஸ்ஸிங் ரூமில் மகிழ்ச்சியான எல்லா சூழ்நிலையும் இப்படித்தான்.

இந்த இரண்டுக்கும் வித்தியாசம் என்ன? இரண்டுமே மிகவும் வெற்றிகரமான டிரெஸ்ஸிங் ரூம்தான். நாங்கள் ஒரே ஒரு ரஞ்சி டிராபியை மட்டும் வென்றோம். ராஜஸ்தான் இரண்டு முறை வென்றது. இதனால் டெல்லி சற்று குறைந்து காணப்பட்டது. இதில் இருக்கும் வித்தியாசம் இவ்வளவுதான்!” என்று கூறியிருக்கிறார்!