“உங்களாலும் முடியாது.. அடுத்தவங்க தந்தாலும் எடுத்துக்க மாட்டிங்க.. என்னப்பா பண்றது?” – அக்தர் பாகிஸ்தான் அணியை கடுமையான கேள்வி!

0
937
Pakistan

இன்று உலகக்கோப்பை தொடரில் பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது இருவருக்குமே அரை இறுதிக்கு மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கும்.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பேட்டிங் செய்ய மிகவும் சாதகமான ஆடுகளத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நல்லவிதமாகவே ஆரம்பித்தார்கள்.

டேவிட் வார்னர் 10 ரன்கள் எடுத்திருந்த பொழுது ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை, உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்ற பாகிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் உசாமா மிர் கோட்டை விட்டார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திய டேவிட் வார்னர் மேற்கொண்டு 153 ரன்கள் என மொத்தம் 163 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக சிதைத்து விட்டார். இன்னும் ஒரு துவக்க ஆட்டக்காரர் மிட்சல் மார்ஸ் தன் பங்குக்கு 121 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் இது மட்டுமில்லாமல் மேலும் இரண்டு எளிமையான கேட்ச் வாய்ப்புகளை பாகிஸ்தான் வீணடித்தது. இறுதிக்கட்டத்தில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் சரியான முறையில் விளையாடாத காரணத்தினால், 400 ரன்கள் எடுக்க வேண்டிய ஆஸ்திரேலிய அணி 367 ரன்கள் மட்டுமே ஒன்பது விக்கெட் இழப்புக்கு எடுத்தது.

இந்தப் போட்டியில் கிடைத்த டேவிட் வார்னர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருந்தால், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்தியாவில் தடுமாறுவதற்கு, அவர்களை 300 ரன்களுக்குள் பாகிஸ்தான் அணியால் கட்டுப்படுத்தி இருக்க முடியும். மேலும் போட்டியில் வெற்றி பெறவும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருந்திருக்கும்.

இந்த நிலையில் இன்றைய பாகிஸ்தான அணியின் செயல்பாடு குறித்து பேசி உள்ள சோயப் அக்தர் கூறும் பொழுது “உங்களாலும் கேட்ச் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கொடுக்கின்ற கேட்ச் வாய்ப்புகளையாவது எடுத்துக் கொள்ளுங்கள். யாராலும் இவ்வளவு கேட்ச் வாய்ப்புகளை வீணடிக்கவே முடியாது!” என்று மிகவும் வருத்தப்பட்டு கூறி இருக்கிறார்!