“நீங்க அக்தர கூட்டிட்டு வாங்க.. 150 கி.மீ போடுங்க.. ஆனா அடி கன்ஃபார்ம்!” – தினேஷ் கார்த்திக் மாஸ் ஸ்பீச்!

0
2329
DK

நேற்று டெல்லியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில், 273 ரன்களை துரத்தி அபார வெற்றி பெற்றது!

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா துவக்க ஆட்டக்காரராக வந்து 63 பந்துகளில் சதம் அடித்து, பல்வேறு சாதனைகளை ஒரே ஆட்டத்தில் படைத்தார்.

- Advertisement -

நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 19ஆவது இன்னிங்ஸில் விளையாடிய ரோகித் சர்மா ஆயிரம் ரன்களை கடந்து, ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் குறைந்த எண்ணிக்கையில் வேகமாக ஆயிரம் ரன்னை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்திருந்த கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்தார். இத்தோடு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் மொத்தமாக ஏழு சதங்கள் அடித்து சச்சின் சாதனையை முறியடித்து, அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.

இந்திய அணிக்குள் ரோகித் சர்மா வந்தபொழுது, அவரிடம்தான் அப்போது இருந்த இந்திய வீரர்களில் அதிக ஷாட்கள் இருந்தது. குறிப்பாக இப்பொழுதுவரை ஷார்ட் பந்துகளை புல் ஷாட் அடிப்பதில் வெளிநாட்டு வீரர்களை விட ரோகித் சர்மா திறமையானவர். அவரைப்போல் ஃப்ரண்ட் புட்டில் அடிப்பது கடினம்.

- Advertisement -

ரோகித் சர்மா குறித்து பேசி உள்ள தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அதிக சிக்ஸர்கள் அடித்ததற்கு காரணம் ஃபுல் ஷாட்தான். அந்த ஷாட்டிற்கு ஒரு மறுபெயர் வைக்க வேண்டும் என்றால் ரோகித் சர்மா ஷாட் என்று வைக்க வேண்டும்.

அந்தக் குறிப்பிட்ட ஷாட்டில் அவருக்கு அவ்வளவு தரமும், அதிகாரமும் இருக்கிறது. 135 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர்களை மட்டும் அவர் அப்படி அடிப்பதில்லை. நீங்கள் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய அக்தரை கொண்டு வந்தாலும் அவர் அதேபோல் அடிப்பார்.

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 44 இன்னிங்ஸ்களில் ஆறு சதங்கள் அடித்தார். ரோகித் சர்மா பெரும் 19 இன்னிங்ஸ்களில் ஏழு சதம் அடித்திருக்கிறார்.

உலகக் கோப்பை தொடர்களில் அவர் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்? என்பதை இது காட்டுகிறது. இனி அவருக்கு சதம் பெறுவது என்பது கொஞ்சம் கடினமாகவே இருக்கும். ஏனென்றால் அவர் தாக்குதல் பாணியில் விளையாட ஆரம்பித்திருக்கிறார். எனவே அவர் சதம் பற்றி கவலைப்படாமல் ஸ்ட்ரைக்ரேட் பற்றி மட்டுமே பார்ப்பார்!” என்று கூறியிருக்கிறார்.