“சர்துல் தாகூருக்கு நீங்க ரொம்ப அநியாயம் பண்றீங்க சீக்கா” – அப்பாவையே வச்சு வெளுத்த அனிருதா ஸ்ரீகாந்த்!

0
623
Srikanth

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நிர்வாகம் சொந்த மண்ணில் நடக்க இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தமது அணியை தயார் செய்வதற்கான நெருக்கடியில் கடைசி கட்டத்தில் இருக்கிறது!

தற்பொழுது இந்திய டி20 அணி பும்ரா தலைமையில் அயர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு அயர்லாந்தில் முகாமிட்டு இருக்கிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது.

- Advertisement -

இந்தப் போட்டியை பார்த்துவிட்டு ஆசியக் கோப்பைக்கான அணியை அறிவிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் தேர்வு குழு காத்திருக்கிறது. ஏனென்றால் காயத்திலிருந்து திரும்பி வந்த பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் எப்படி செயல்படுகிறார்கள் என்று பார்க்க வேண்டி இருக்கிறது.

ஆசிய கோப்பைக்கான அணியை தேர்வு செய்வதன் மூலமே உலகக் கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்ய முடியும். உலகக் கோப்பைக்கான அணியை அறிவிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 5ஆம் தேதி.

எனவே நேற்று இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பங்குபெறும் அவரது மகன் அனிருதா ஸ்ரீகாந்த் நடத்திவரும் யூடியூப் சேனலில், ஆசியக் கோப்பைக்கு எப்படியான அணியை தேர்ந்தெடுப்பது என்கின்ற விவாதம் நடைபெற்றது.

- Advertisement -

இதில் பேசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவருடைய அணியில் மட்டும் இல்லாமல் விளையாடும் அணியிலும் இசான் கிசானுக்கு இடம் கொடுத்திருந்தார். அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் மற்றும் அணியின் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக விளையாடக்கூடிய, எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்யக்கூடிய ஷர்துல் தாகூருக்கும் மொத்த அணியிலும் இடம் தரவில்லை.

இது நேற்று தந்தை மகன் இருவருக்கும் இடையே மிகப்பெரிய விவாதமாக மாறியது. சர்துல் தாக்கூர் பெரிய அளவில் ரன்களை தரக்கூடிய பந்துவீச்சாளராக இருக்கிறார், நான் அவரை எப்பொழுதும் சேர்க்க மாட்டேன் என்று உறுதியாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறினார்.

இந்த நிலையில் சர்துல் தாக்கூர் எப்படி அபாரமாக செயல்பட்டு இருக்கிறார் என்று புள்ளி விபரங்களை காட்டி அனிருதா ஸ்ரீகாந்த் பேச, அதையும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மறுத்து, சிறிய அணிகளுடன் செய்வது எல்லாம் கணக்கில் எடுக்க முடியாது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வீசியது வெறும் 4 ஓவர் மட்டும்தான் என்று மறுத்துவிட்டார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அனிருதா ஸ்ரீகாந்த் ” சீக்கா நீங்க அநியாயம் பண்றீங்க. ரொம்ப அநியாயம் பண்றீங்க. தொடர்ச்சியா விளையாடி 50 விக்கெட்டுக்கு மேல எடுத்து கையில வச்சிருக்க ஒரு பிளேயருக்கு நீங்க எப்படி வாய்ப்பு தர முடியாதுன்னு சொல்ல முடியும்? நீங்க இன்னும் 1980லயே இருக்கீங்க. இந்தியாவுக்கு ஏற்கனவே எட்டாவது இடத்தில பேட்டிங் இல்லாம பெரிய பிரச்சினையா இருக்கு. இப்ப அந்த இடத்துக்கு பேட்டிங் செய்யக்கூடிய ஒரு ஃபாஸ்ட் பவுலர் அவர்தான் இருக்காரு. அவரை நீங்க சேர்க்க முடியாது அப்படினு சொன்னா எப்படி?

உங்களுக்குப் பிடிச்ச பிளேயர்னா பத்து முட்டை வாங்குனா கூட எதுவும் சொல்ல மாட்டீங்க. அதே உங்களுக்கு பிடிக்காத பிளேயர் அப்படினா, பத்து மேட்ச்ல 9 மேட்ச் நல்லா விளையாடிய ஒரு மேட்ச்ல சரியா விளையாடலனா கூட நீங்க அவங்கள குறை சொல்லுவீங்க. இது சரியே கிடையாது!” என்று கடுமையாகவே பேசிவிட்டார். பிறகு ஒரு வழியாக அதை விட்டு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வெளியே வந்து, அவரது கருத்தை ஏற்றுக் கொண்டார்!