” ரோகித் கேப்டனா இத செஞ்சா பாகிஸ்தான் கூட பெரிய அடி விழும்!” – கம்பீர் பகிங்கர எச்சரிக்கை!

0
473
Gambhir

தற்பொழுது 16வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது சுற்று போட்டிகள் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன. இரண்டாவது சுற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

இதையடுத்து ஆசிய கோப்பை தொடரில் இன்றும் நாளையும் ஓய்வு நாளாக இருக்கிறது. ஒரு நாள் கிரிக்கெட் வடிவம் என்பதால், போட்டிகளை ஓய்வில்லாமல் நடத்துவது முடியாது. வீரர்களை பயணம் மற்றும் போட்டி ஆகிய இரண்டும் மிகப்பெரிய அளவில் உடல் ரீதியாக களைப்படைய வைத்து விடும்.

- Advertisement -

மேற்கொண்டு இரண்டாம் சுற்று போட்டிகள் அனைத்தும் இலங்கையின் கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடக்க இருக்கின்றன. மழை அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அடுத்து நடைபெற இருக்கும் இரண்டாம் சுற்று போட்டிகளுக்கு மழை என்ன செய்யும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட அணியில் உடல் தகுதியை எட்டி இடம் பிடித்த கேஎல்.ராகுல் ஆசியக் கோப்பை இரண்டாவது சுற்று இந்திய அணிக்கு திரும்பி வந்திருக்கிறார். தற்பொழுது இவர் வந்திருப்பது இந்திய அணிக்கு நல்லவிதமான ஒரு தலைவலியை உண்டாக்கி இருக்கிறது.

என்னவென்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்து மிகவும் நெருக்கடியான நேரத்தில் இருந்த பொழுது, விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக வந்து, இஷான் கிஷான் அற்புதமாக விளையாடி அணியை மீட்டு 82 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.

- Advertisement -

இப்பொழுது முதன்மை விக்கெட் கீப்பர் கேஎல்.ராகுல் அணிக்கு திரும்பி இருக்கின்ற காரணத்தினால், இருவரில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக அணியில் யாரை எடுப்பது என்கின்ற பெரிய குழப்பம் நீடித்து வருகிறது. இஷான் கிஷான் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக மட்டுமில்லாமல், இடது கை வீரராக இருப்பதால், போட்டியின் மத்தியில் வீசப்படும் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாட தேவையாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கே.எல்.ராகுலா? இல்லை இஷான் கிஷானா? என்கின்ற பெரிய குழப்பத்திற்கு பதில் அளித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் “கே.எல்.ராகுலுக்கு முன்னதாகவே இஷான் கிசானை விளையாடும் அணியில் வைத்து விளையாடாவிட்டால், இந்தியா மிகப்பெரிய தவறை செய்ததாக அமையும்!” என்று கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்.

இன்னொரு பக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தன் யூடுயூப் சேனலில் பேசும்பொழுது ” இஷான் கிஷானுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் வருகின்ற பொழுது அவருக்கு அழுத்தம் நிறைய இருக்கிறது. அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்துள்ளார். ஆனாலும் கூட அவருக்கு தொடர்ந்து அதிக வாய்ப்புகள் கிடைப்பதை நம்மால் பார்க்க முடியவில்லை!” என்று கூறி இருக்கிறார்!