இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் உயர்ந்து வந்ததற்குப் பின்னால் தன்னுடைய மகன் யுவராஜ் சிங் பெரிய காரணமாக இருந்திருக்கிறார் என யோக்ராஜ் சிங் கூறியிருக்கிறார்.
நேற்று இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த அணிக்கு புதிய கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். மேலும் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.
கில்லுக்கு காத்திருக்கும் சவால்
தற்போது கில் கேப்டனாகி இருக்கும் நேரத்தில் அவருடைய அணியில் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இல்லாதது அவருக்கு பின்னடைவாக அமைகிறது. பொதுவாக டெஸ்ட் கேப்டனாக வரும் பொழுது அனுபவ வீரர்களின் ஆதரவு தேவையாக இருக்கும். இந்த முக்கிய விஷயத்தை கில் இழக்கிறார்.
மேலும் கில் ஆசியா தாண்டி இதுவரையில் இரண்டு அரை சதங்கள் மட்டுமே அடித்திருக்கிறார். அவருக்கு சேனா நாடுகளில் நல்ல ரன் ஆவரேஜ் கிடையாது. இதன் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஒரு பேட்ஸ்மேனாக முதலில் ரன்கள் எடுக்க வேண்டிய அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி அவர் கேப்டனாக பேட்ஸ்மேனாக சாதிப்பாரா? என்கின்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கிறது.
பின்னணியில் யுவராஜ் சிங்
இதுகுறித்து யோக்ராஜ் சிங் பேசும்பொழுது ” தற்போது கில் இந்த அளவுக்கு வளர்ந்து இருப்பதற்கு கிரெடிட் கொடுக்க வேண்டும் என்றால் முதலில் அவரது தந்தைக்கு கொடுக்க வேண்டும் அடுத்து என்னுடைய மகன் யுவராஜ் சிங்குக்கு கொடுக்க வேண்டும். தில் இங்கிருந்து பல ஆண்டுகள் இந்திய அணிக்கு கேப்டனாக தொடர்வார். இதற்கு யுவராஜ் சிங் வழிகாட்டுதல் மிக முக்கியமாக இருந்திருக்கிறது”
இதையும் படிங்க : தோனிக்கு நடக்காதது.. ராசியான கேப்டன் ஸ்ரேயாஸ் படைத்த வினோத மோசமான சாதனை.. புள்ளி பட்டியலில் சோகம்
“என்னுடைய மகன் யுவராஜ் சிங் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் மூளையை கொண்டிருக்கிறார். அவரைப் போன்ற ஒருவர் தானாக முன்வந்து கில் போன்ற ஒருவரை எடுத்துக்கொண்டு ஆதரிப்பது பெரிய விஷயம். அவரது வெற்றிக்குப் பின்னால் யுவராஜ் சிங் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.






