இந்திய கிரிக்கெட்

கில்லை எதுக்காக நீக்கினீங்க.. அபிஷேக்கையும் தூக்கிடுங்க கபில்தேவுக்கு என்ன நடந்தது தெரியுமா? – யோக்ராஜ் சிங் விமர்சனம்

தற்போது டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இருந்து துணை கேப்டன் சுப்மன் கில்லை நீக்கியது தவறானது என யுவராஜ் தந்தை யோக்ராஜ் சிங் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நியூசிலாந்து டி20 தொடர் மற்றும் டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணிகளில் இருந்து துணை கேப்டனாக இருந்து வந்த சுப்மன் கில் நீக்கப்பட்டார். அவர் தொடர்ந்து தனக்கு கொடுக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வாய்ப்புகளை வீணடித்தருந்தார்.

கிளம்பிய சர்ச்சைகள்

சுப்மன் கில் மோசமாக விளையாடி வந்த நிலையில், அவருடைய இடத்தில் விளையாடுவதற்கு தயாராக இருந்த சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் மிகச் சிறப்பான ஃபார்மில் இருந்தார்கள். மேலும் அவர்கள் டி20 கிரிக்கெட் வடிவத்தில் அதிரடியான பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள்.

இதன் காரணமாக சுப்மன் கில்லை நீக்க வேண்டும் என்ற நெருக்கடி தேர்வுக் குழுவுக்கு அதிகரித்தது. இதன் காரணமாக துணைக் கேப்டனாக இருந்தாலும் இறுதி நேரத்தில் நீக்கினார்கள். இந்த நிலையில் இது தவறான விஷயம் என யோக்ராஜ் சிங் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கபில்தேவுக்கு நடந்தது தெரியுமா?

இதுகுறித்து யோகராஜ் சிங் கூறும் பொழுது ” சுப்மன் கில் துணை கேப்டன்.
அவர் நான்கைந்து இன்னிங்ஸ்களில் விளையாடவில்லை என்றால் நீக்கி விடுவீர்களா? இந்தியாவில் 100 போட்டிகளில் 10 இன்னிங்ஸ் சரியாக விளையாடாதவர்கள் அணியில் பல காலம் விளையாடியிருக்கிறார்கள். அபிஷேக் சர்மா இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்தார். அவர் நான்கு போட்டிகளில் சரியாக விளையாட விட்டால் நீக்கிவிடுவீர்களா?”

இதையும் படிங்க : டி20 உகோ தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு.. 2 ஸ்டார் வீரர்கள் நீக்கம்.. கிரிக்கெட் உலகம் ஆச்சரியம்

“தற்போது இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக பார்க்கப்படும் கபில்தேவ் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் சரியாக விளையாடவில்லை. ஆனால் அப்போது கேப்டனாக இருந்த பிசன் சிங் பேடி அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து தொடருக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் சிறப்பாக செயல்பட்டு பெரிய வீரராக வந்தார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts