டி20 உகோ தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு.. 2 ஸ்டார் வீரர்கள் நீக்கம்.. கிரிக்கெட் உலகம் ஆச்சரியம்

0
208
SA

அடுத்த மாதம் பிப்ரவரி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் டி20 உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்க அணியில் 2 நட்சத்திர வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு இருப்பது கிரிக்கெட் உலகத்தை பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

பவுலிங் யூனிட்

இன்று அறிவிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா டி20 உலகக் கோப்பை அணியில் ரபாடா மார்க்கோ யான்சன், நோர்க்கியா, லுங்கி நிகிடி, மாபாக என வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். மேலும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக கார்பின் போஸ் மற்றும் ஜேசன் ஸ்மித் இருவரும் ஸ்மித் இருவரும் இருக்கிறார்கள்.

மேலும் சுழல் பந்துவீச்சாளர்களாக கேசவ மகாராஜ், சுழல் ஆல்ரவுண்டர்களாக ஜார்ஜ் லிண்டே மற்றும் டோனவன் பெரிரா இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பவுலிங் யூனிட் மிகவும் வலிமையானதாக இருக்கிறது. அதே சமயத்தில் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இல்லாதது பலவீனமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இரண்டு முக்கிய வீரர்கள் நீக்கம்

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான ரியான் ரிக்கல்டன் நீக்கப்பட்டிருக்கிறார். இதைவிட பெரிய ஆச்சரியமாக மிடில் ஆர்டர் அதிரடி வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் நீக்கப்பட்டிருக்கிறார். இது கிரிக்கெட் உலகில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் எதிர்கால வீரராக பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :

தென் ஆப்பிரிக்க அணி :

எய்டன் மார்க்ராம்
டோனோவன் ஃபெரீரா
டேவிட் மில்லர்
கார்பின் போஷ்
மார்கோ ஜான்சன்
லுங்கி நிகிடி
டெவால்ட் பிரீவிஸ்
ஜார்ஜ் லிண்டே
அன்ரிச் நோர்க்கியா
குயின்டன் டி காக்
கேசவ் மஹாராஜ்
காகிசோ ரபாடா
டோனி டி சோர்ஸி
குவேனா மாபாக
ஜேசன் ஸ்மித்

- Advertisement -