இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை ஆறே மாதத்தில் தன்னால் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ஆக மாற்ற முடியும் என யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் கூறியிருக்கிறார்.
தற்போது அர்ஜுன் டெண்டுல்கர் 30 லட்சம் ரூபாய் அடிப்படை விலைக்கு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார். இதுவரையில் அவர் வேறு எந்த ஐபிஎல் அணியாலும் வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் அவருக்கு ஒரு சில போட்டிகள் மட்டுமே விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இல்லாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் பௌலிங் யூனிட்டில் ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் தேவைப்பட்டார். இப்படியான நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாட வைக்கப்படலாம் என பலரும் எதிர்பார்த்தார்கள்.
இதற்கு எதிர்விதமாக அர்ஜுன் டெண்டுல்கர் விளையாட வைக்கப்படவில்லை. மாறாக சத்திய நாராயணா ராஜு என்ற புதிய இந்திய இளம் வேகப் பந்துவீச்சாளர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இப்படியான நிலையில்தான் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் அதிரடியான கருத்தை அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து கூறியிருக்கிறார்.
இது குறித்து யோக்ராஜ் சிங் பேசும் பொழுது “அர்ஜுன் டெண்டுல்கர் என்னிடம் வந்தால் அடுத்த ஆறே மாதத்தில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக அவரை நான் மாற்றி காட்டுவேன். அவருக்கு பேட்டிங்கில் நல்ல திறமை இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. அவர் என்னிடம் 12 நாட்கள் மட்டுமே பயிற்சி பெற்று சென்றார். பிறகு ரஞ்சி அறிமுகப் போட்டியில் அவர் சதம் அடித்தார்”
இதையும் படிங்க : ருதுராஜ் வெறும் பேப்பர் கேப்டனா.. முடிவுகளை அவர் எடுப்பதில்லையா? – தோனி மனம் திறந்த பதில்
“யுவராஜ் சிங்கும் சச்சினும் அர்ஜுனை என் பொறுப்பின் கீழ் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். அவர் என்னுடன் 10 முதல் 12 நாட்கள் மட்டும்தான் இருந்தார். அப்போது ‘சிறந்த பேட்டராக இருக்கக்கூடிய திறமை படைத்த இந்த பையனை வேகபந்துவீச்சாளராக வைத்து திறமையை ஏன் வீணடிக்கிறார்கள்?’ என்று நினைத்தேன். அவரால் பேட்டிங் ஆல்ரவுண்டராக வர முடியும்” என்று கூறியிருக்கிறார்.