இந்தியாவின் 15 வயதே ஆன இளம் பேட்டிங் சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பிசிசிஐ ஒரு நீண்ட கால கரியர் பிளானை தயார் செய்து வருகிறது.
இவர் சச்சின் டெண்டுல்கர் போல இந்திய கிரிக்கெட் டீமுக்கு நீண்ட காலம் சேவை செய்ய வேண்டும் என்பதில் கிரிக்கெட் வாரியம் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. மும்பையில் நடந்த உயர்மட்ட ரிவ்யூ மீட்டிங்கில் வைபவ் சூர்யவன்ஷியின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
துலீப் டிராபி செமி ஃபைனலில் அரைசதம் அடித்து சாதனை படைத்த இவர், செப்டம்பர் 13 முதல் தொடங்க உள்ள அஃப்கானிஸ்தான் டி20 சீரிஸ் மற்றும் ஏசியன் கேம்ஸ் இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சாய்கியா பேசும்போது “வைபவ் சூர்யவன்ஷி அல்லது அவரைப் போன்ற திறமையான பிளேயர்கள் சச்சின் டெண்டுல்கர் போல நாட்டுக்காக நீண்ட காலம் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே வைபவ்வை நாங்கள் மிகவும் சீரியஸாக கவனித்து வருகிறோம். அவரது சர்வதேச கரியரின் ஒவ்வொரு ஸ்டெப்பையும் பிசிசிஐ உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது” என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த அவர் “அவரது வளர்ச்சி ஒரே ஒரு சீரிஸ் அல்லது ஒரு வருடத்தோடு நின்றுவிடக் கூடாது என்பதில் மிகவும் காஷியஸாக இருக்கிறோம். வைபவ் மட்டுமல்லாமல் மேலும் 10 முதல் 15 இளம் பிளேயர்கள் அடங்கிய டார்கெட்டட் குரூப்பை விவிஎஸ் லக்ஷ்மண் தலைமையிலான சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் டீம் தொடர்ந்து மானிட்டர் செய்து வருகிறது” என்று கூறி முடித்தார்.