ருதுராஜ் வெறும் பேப்பர் கேப்டனா.. முடிவுகளை அவர் எடுப்பதில்லையா? – தோனி மனம் திறந்த பதில்

0
224
Dhoni

சிஎஸ்கே அணியில் கேப்டனாக ருதுராஜ் தனிப்பட்ட முடிவுகளை களத்தில் எடுக்கிறாரா? அதில் தன்னுடைய தலையீடுகள் இருக்கிறதா? என்பது குறித்து சிஎஸ்கே முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

கடந்த ஆண்டு திடீரென மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு புதிய கேப்டனாக ருதுராஜை சிஎஸ்கே அணிக்கு கொண்டு வந்தார். ஏற்கனவே இதே போல் ரவீந்திர ஜடேஜாவை புதிய கேப்டனாக கொண்டு வந்த போது அந்த முடிவு சரியான முறையில் அமையவில்லை. ஆனால் தற்போது ருதுராஜை கேப்டனாக கொண்டு வந்தது நல்ல விதத்திலேயே வேலை செய்கிறது.

- Advertisement -

ருதுராஜ் வெறும் பேப்பர் கேப்டன்

இந்த நிலையில் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியால் ருதுராஜ் தலைமையின் கீழ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தையே பெற்று ஒரு போட்டி தோல்வி காரணமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக அணியின் முடிவுகளை அவர் எடுக்கக்கூடிய இடத்தில் இல்லை எனவும், அவர் வெறும் பேப்பர் கேப்டன் ஆக மட்டும் செயல்படுகிறார் எனவும், கேப்டனாக இல்லாவிட்டாலும் மகேந்திர சிங் தோனியை எல்லா முடிவுகளையும் களத்தில் எடுக்கிறார் என்றும் பரவலாக கருத்துகள் கூறப்பட்டது. தற்பொழுது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தோனி பதில் அளித்திருக்கிறார்.

- Advertisement -

நான் தலையிடுவது கிடையாது

இதுகுறித்து தோனி பேசும் பொழுது “ருதுராஜ் சில காலமாக எங்களுடைய பகுதியாக இருந்து வருகிறார். அவரிடம் நல்ல குணம் இருக்கிறது. அவர் மிகவும் அமைதியானவர் மற்றும் இணக்கமானவர். இதனால்தான் கேப்டன் பொறுப்புக்கு அவர் சரியாக இருப்பார் என்று நாங்கள் கருதினோம். அவரை கேப்டனாக அறிவித்த பொழுது நான் அவரிடம் ‘ நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்க வேண்டியது கிடையாது. நான் முடிந்த வரையில் விலகியே இருப்பேன்’ என்று கூறினேன்”

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. சிஎஸ்கே பந்தை சேதப்படுத்தியதாக புகார்.. வெளியான ஆதாரம்.. சிக்கலில் கலீல் அகமது, ருதுராஜ்

“இருந்த போதிலும் பின்னணியில் இருந்து நான் முடிவுகளை எடுக்கிறேன் என பல யூகித்து வந்தார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் 99 சதவீதமான முடிவுகளை அவர்தான் எடுக்கிறார். மிக முக்கியமான அழைப்புகள், களம் அமைப்பு, பந்துவீச்சு மாற்றங்கள் என எல்லாவற்றையும் அவரே செய்கிறார். நான் எங்காவது சிறு உதவிகளை மட்டுமே செய்கிறேன். வீரர்களை அவர் மிகவும் சிறப்பாக கையாளுகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -