இந்திய கிரிக்கெட்

கம்பீர் தன்னுடைய பேவரைட் பிளேயரை மட்டுமே எடுக்கிறார்.. இந்த வீரர் மேல் நம்பிக்கை இல்லை – பத்ரிநாத் விமர்சனம்

​அஃப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய டி20 ஸ்குவாட் அறிவிக்கப்பட்ட நிலையில், ஹெட் கோச் கௌதம் கம்பீரைத் தாக்கிப் பேசியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத்.

- Advertisement -

​இந்த டீம் செலக்ஷன் குறித்து பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. முக்கியமாக கம்பீருக்குப் பிடித்தமான ஃபேவரிட் பிளேயர்கள் மீண்டும் டீமுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகப் பேச்சுகள் அடிபடுகின்றன.

​வாஷிங்டன் சுந்தருக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வரும் வேளையில், நிதீஷ் குமார் ரெட்டியின் செலக்ஷன் குறித்துச் சில கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.

​இதுகுறித்து பத்ரிநாத் பேசும்போது “கோச்சின் ஃபேவரிட் பிளேயர்ஸ் மீண்டும் வந்துவிட்டார்கள். வாஷிங்டன் சுந்தருக்கு நல்ல பேக்கிங் கிடைக்கிறது, அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிதீஷ் குமார் ரெட்டி ஒரு பேட்ஸ்மேன் மட்டுமே, சிறந்த பவுலர் கிடையாது என்பதால் அவரது தேர்வை நான் பெரிய அளவில் மதிப்பிடவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசுகையில் “ஜஸ்ப்ரீத் பும்ராவின் ரிட்டர்ன் இந்திய அணிக்கு மிகப் பெரிய பாசிட்டிவ் விஷயம். அவர் நீண்ட நாட்களாகக் கிரிக்கெட் விளையாடாததால் மேனேஜ்மென்ட்டிடம் பேசி இந்தத் தொடரில் இடம் பிடித்திருக்கலாம். அதேபோல் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது” என்று கூறி முடித்துள்ளார்.

- Advertisement -
Published by

Recent Posts