இந்திய கிரிக்கெட்டில் பயிற்சியாளர் கம்பியிருக்கு பிடிக்காத ஆனால் விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்திய அணி உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது, அடுத்து ஆஸ்திரேலியாவில் வைத்து பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்தது என இரண்டு பெரிய தோல்விகளும் இந்திய கிரிக்கெட்டில் பெரிய குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மெத்தனமாக மாறிய வீரர்கள்
தற்போது இந்திய நட்சத்திர வீரர்கள் முதல் கொண்டு அனைவரையும் உள்நாட்டு சிவப்புப் பந்து கிரிக்கெட்டுக்கு திரும்ப கொண்டு வருவதை தீவிரமாக இந்திய கிரிக்கெட் வாரியம் செயல்படுத்த இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ரோகித் சர்மா ரஞ்சி பயிற்சியில் இருக்கும் மும்பை அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அணியின் கில் ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், கேஎல்.ராகுல் என அனைவருமே ரஞ்சி கிரிக்கெட்டுக்கு திரும்ப இருக்கிறார்கள். இதில் விராட் கோலியின் நிலை என்னவென்று மட்டும் தான் தெரியாமல் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து வீரர்களின் உடல் தகுதியிலும் கண்டிப்பான முறையை இந்திய கிரிக்கெட் வாரியம் பின்பற்ற விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கிறது.
கம்பீருக்கு பிடிக்காத திட்டம் வருகிறது
இந்த நிலையில் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த பொழுது வீரர்களின் உடல் தகுதி அளவை நிர்ணயிப்பதற்கு யோயோ டெஸ்ட் கொண்டுவரப்பட்டது. மிகக்குறிப்பாக இந்த பரிசோதனைகள் ஒரு வீர தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அணியில் சேர்க்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த முறையை மீண்டும் இந்திய கிரிக்கெட்டில் கொண்டு வர தீவிரமாக யோசிக்கப்பட்டு வருவதாக செய்திகள் கூறுகிறது.
இதையும் படிங்க : 23 வயது தமிழ்நாட்டு பையன்தான்.. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு
அதே சமயத்தில் இந்த யோயோ டெஸ்ட் முறை கம்பீருக்கு பிடிக்காத ஒன்றாக இருந்திருக்கிறது. வீரர்கள் பிட்டாக இருக்கிறார்களா இல்லையா என்பதை செயல்பாட்டின் அடிப்படையில் பயிற்சியாளர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும், இப்படியான அளவைக் கொண்டு தேர்வு செய்யக்கூடாது என கம்பீர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு பிடிக்காத ஒன்றை இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டுவர இருப்பது எப்படி ஆன தாக்கத்தை உண்டாக்கும்? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






