சச்சின் சாதனையை ரூட் உடைக்கிறது உறுதி.. ஆனா அது வேற ஒரு வீரருக்கு பதிலடியா இருக்கும் – ரிச்சர்ட்ஸ் கருத்து

0
0

​டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் முறியடிப்பாரா என்ற கேள்வி தற்போது சர்வதேச கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.

​சச்சினின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இது இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட்டிற்கு ஒரு நல்ல பதிலடியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

​சச்சினின் சாதனை குறித்து விவ் ரிச்சர்ட்ஸ் பேசும்போது “அவர் தற்போது கேப்டனாக இருப்பதால், இந்த மைல்கல்லை எட்டுவதற்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இதை அவர் அடைவதில் எந்த தவறும் இல்லை. இது நிச்சயம் சாத்தியமான ஒன்றுதான். இதன் மூலம் யார்க்ஷயர் அணியில் இருந்து வந்த சிறந்த பேட்டர் சர் ஜெஃப்ரி பாய்காட் அல்ல, ஜோ ரூட் தான் என்ற செய்தியை ஜெஃப்ரி பாய்காட்டிற்கு தெளிவாக சொல்லிவிடலாம்” என்று கூறி இருக்கிறார்.

​தற்போதுள்ள ஃபார்மில் ஜோ ரூட் எளிதாக சச்சினின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் தொடர்ந்து எல்பிடபிள்யூ (LBW) முறையில் அவுட் ஆவது அவருக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

- Advertisement -

​இந்த எல்பிடபிள்யூ சிக்கல் குறித்து ஜோ ரூட் பேசும்போது “நான் நீண்ட காலமாக இந்த கிரிக்கெட் விளையாட்டை விளையாடி வருகிறேன். இதுபோன்ற பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்பதை நான் எப்போதும் கண்டறிந்து விடுவேன். இந்த சூழ்நிலையும் அதற்கு விதிவிலக்கல்ல. நான் 14,000 ரன்களுக்கு மேல் எடுத்ததற்கும், 15 ஆண்டுகள் சர்வதேச அளவில் விளையாடியதற்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -