“கிரிக்கெட்ல ஒரு விஷயத்தை பொய்னு நேத்து மேக்ஸ்வெல் காட்டிட்டார்.. 20 வருஷத்துல..!” – வாசிம் அக்ரம் பெரிய பாராட்டு!

0
4832
Wasim

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் தனி ஒரு வீரராக நின்று இரட்டை சதம் அடித்து ஆப்கானிஸ்தான் அணி நொறுக்கி ஆஸ்திரேலியா அணியை வெல்ல வைத்தார்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் ஏழு விக்கெட்டுகளை 91 ரன்கள் எடுக்கும் பொழுது இழந்துவிட்டது. இலக்கு 292 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இருந்து மேற்கொண்டு விக்கெட் விடாமல் இலக்கை எட்ட மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்தார். இதில் மிக முக்கியமாக அவர் காலில் மோசமான தசைப்பிடிப்பு ஏற்பட்ட பொழுதும் வெளியேறாமல் நின்று விளையாடி இரட்டை சதம் அடித்தார்.

இதன் காரணமாக அவருடைய இந்த இன்னிங்ஸ் குறித்து கிரிக்கெட் உலகத்தில் பலரும் தங்களுடைய பாராட்டையும் வாழ்த்தையும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

மிகக்குறிப்பாக கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் மேக்ஸ்வெல் இன்னிங்ஸை குறிப்பிட்டு நிறைய பாராட்டி வருகிறார்கள். ஏனென்றால் அவர் விளையாடிய விதம் அந்த அளவிற்கு அசாதாரணமான ஒன்றாக இருந்தது. மேலும் அவர் விளையாடிய சூழலும் அவ்வளவுஅழுத்தம் நிறைந்ததாக இருந்தது.

- Advertisement -

பாகிஸ்தான் லெஜெண்ட் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறும் பொழுது ” இது நம்ப முடியாத ஒன் மேன் ஷோ. ஒரு லெஜென்டின் அருமையான திறமை. ஒரு ஆள் கிரிக்கெட்டில் போட்டியை எப்பொழுதும் வெல்ல முடியாது என்ற பழமொழி உண்டு. ஆனால் மேக்ஸ்வெல் நேற்று அதை பொய் என்று நிரூபித்து காட்டினார்.

நேற்று களத்தில் தசைப்பிடிப்பு அவருக்கு இருந்தது. அது மிகவும் வலி மிகுந்த மோசமான ஒன்று. அப்படி ஒன்றை தாங்கி விளையாட வேண்டும் என்றால் இதயபூர்வமாக இருக்க வேண்டும். நேற்று மேக்ஸ்வெல் அதைத்தான் செய்தார்.

அதேபோல் ஒரு முனையில் மிகவும் பொறுப்பை காட்டிய கேப்டன் கம்மின்ஸையும் செய்யும் பாராட்ட வேண்டும். அவர் மிகச் சிறப்பாக மேக்ஸ்வெல் விளையாட ஸ்ட்ரைக்கை கொடுத்தார்.

நேற்று மேக்ஸ்வெல் தான் யார் என்று உலகிற்கு காட்டினார். நான் இப்படி ஒரு இன்னிங்ஸ் இதற்கு முன் பார்த்ததே கிடையாது. 20 வருடங்கள் நான் கிரிக்கெட்டில் இருந்தாலும், 20 வருடங்கள் வெளியில் கிரிக்கெட்டுக்கு உழைத்திருந்தாலும், இப்படி ஒன்றைப் பார்த்தது கிடையாது!” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்!