“நேற்று ஹர்திக்.. நாளை கில்லும் குஜராத் டைட்டன்சை விட்டு போகலாம்” – முகமது ஷமி பேட்டி

0
217
Gill

16 வருட ஐபிஎல் வரலாற்றில் இதுவரை செய்யப்படாத மிகப்பெரிய டிரேடிங்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ஹர்திக் பாண்டியாவை எந்த வீரர்களையும் கொடுக்காமல் மும்பை வாங்கியதுதான் அமைந்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய அணியாக ஐபிஎல் தொடருக்குள் வந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாகவே வாங்கப்பட்ட வீரர் ஹர்திக் பாண்டியா.

- Advertisement -

எல்லா கிரிக்கெட் வல்லுனர்கள் உடைய கணிப்புகளையும் தவிடு பொடி ஆக்கி முதல் சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் ஹர்திக் பாண்டியா தலைமையில் சாம்பியன் ஆனது. தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று, கடைசிப் பந்தில் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இழந்தது.

இவ்வளவு வெற்றிகரமான ஒரு அணியின் பயணத்தில் அதுவும் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ஹர்திக் பாண்டியா தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்வதற்கு ஒப்புக்கொண்டார். இது பலருக்கும் பெரிய ஆச்சரியத்தை உண்டு செய்தது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய வெற்றிகரமான கேப்டன் ரோகித் சர்மாவை நீக்கி, ஹர்திக் பாண்டியாவை இந்த வருட ஐபிஎல் தொடருக்கான கேப்டனாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “யார் அணியை விட்டு வெளியேறினாலும் நீங்கள் அணியின் சமநிலை எப்படி இருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். ஹர்திக் இருந்தார், அவர் எங்களை கேப்டனாக நல்ல முறையில் வழி நடத்தினார். இரண்டு சீசனிலும் எங்களை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று 2022 ஆம் ஆண்டு கோப்பையையும் வென்றார்.

ஆனால் குஜராத் அவரை லைப் டைம் அக்ரீமெண்ட் செய்ய கிடையாது. அது அவருடைய முடிவு. இப்போது கில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் இதன் மூலம் நிறைய அனுபவத்தை பெறுவார். ஒருநாள் அவரும் அணியை விட்டு வெளியேறலாம். இது விளையாட்டின் ஒரு பகுதி. வீரர்கள் வருவார்கள் செல்வார்கள்.

உங்கள் கேப்டனாக இருக்கும் பொழுது உங்களது தனிப்பட்ட செயல்பாடுகளை நல்ல முறையில் கவனித்துக் கொண்டே அணி வீரர்களையும் நிர்வகிக்க வேண்டும். தற்பொழுது கில்லுக்கு இது ஒரு சுமையாக இருக்கும். ஆனால் குறைவாகவே இல்லை அதிகமாகவோ எப்படியோ ஆனால் நல்ல வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். அவர் கவலைப்படத் தேவையில்லை. நம் வீரர்களை நல்ல முறையில் நிர்வகித்து அவர்களிடம் இருந்து சிறந்ததை எடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.